காட்டுவாசியாக மாறப்போகும் ஆண்டவர்.. 3 ஹீரோக்களை வைத்து அட்லி செய்யப் போகும் சம்பவம்

Kamal-Atlee: கமல் இப்போது எக்கசக்க படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் வினோத்துடன் புதிய படம் ஒன்றில் கூட்டணி போட இருக்கிறார். அடுத்ததாக மணிரத்னம், கமல் காம்போவில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இந்த சூழலில் காட்டுவாசியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதாவது சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜவான் படம் வெளியாகி 1000 கோடி தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக அட்லிக்கு பாலிவுட் மட்டுமன்றி ஹாலிவுட் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது கமலின் படத்தை இயக்க இருக்கிறாராம்.

Also Read : பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

அதுவும் 3 ஹீரோக்களை ஒரே படத்தில் அட்லி இணைக்க இருக்கிறார். அதாவது கமலுடன் இணைந்து இந்த படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஜவான் படத்தில் விஜய் கேமியோ தோற்றத்தில் நடிப்பார் என்ற தகவல் வெளியான நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் கண்டிப்பாக ஷாருக்கான் மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு படம் எடுப்பதாக அட்லி முடிவு செய்திருந்தார். இப்போது அதில் கமலும் இணைந்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கான கதையை தேர்வு செய்யும் பணியில் அட்லி இறங்க இருக்கிறார்.

Also Read : லால் சலாமுக்கு போட்டியாக இறங்கிய கமல்.. மகளுடன் கஜானாவை நிரப்ப எடுக்கும் அவதாரம்

ஏற்கனவே ஆளவந்தான் படத்தில் கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற கெட்டப்பில் கமல் நடித்திருந்தார். இப்போது அவர் காட்டுவாசியாக நடிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுவும் கமல் மற்றும் விஜய் ஒரு ஒரே படத்தில் இணைய உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த காம்போ உருவானால் கண்டிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் படங்கள் செய்யாத அளவுக்கு வசூல் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் இப்போது விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு அடுத்ததாக இந்த கூட்டணி உருவாக உள்ளது.

Also Read : தட்டு தடுமாறிய ஜெயிலர்.. 18 நாளில் சாதித்து காட்டிய அட்லி, இனி ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது

- Advertisement -