சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு வந்த சிங்கப்பெண்

Serial  Top 6 TRP Rating: சின்னத்திரை பொருத்தவரை மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதற்கு எத்தனையோ சேனல்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தாலும் அதில் முதலிடத்தில் உயரமாக இருப்பது சன் டிவி சேனல் தான். அந்த வகையில் எப்போதுமே இதில் வரக்கூடிய நாடகத்திற்கு மக்களிடமிருந்து அதிகமான வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்த சன் டிவி சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் தன் கணவர் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை தெரிந்து அவரை காப்பாற்ற சாதுரியமாக களத்தில் இறங்கிய அஞ்சலி. இவரை பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று சுவாரசியமாக கதை களம் நகர்ந்து வரும் மிஸ்டர் மனைவி நாடகம் கடந்த வாரம் ஏழாவது இடத்தில் இருந்தது. தற்போது நாடகம் சூடு பிடித்து போவதால் 8.67 ரேட்டிங்கே பெற்று ஆறாவது இடத்திற்கு வந்துவிட்டது.

Also read: ஒத்தப்பன் சுடலை உக்கிரமா வந்திருக்கான்.. கலகலப்பான நடிப்பு இல்லாமல் திணறும் எதிர்நீச்சல்

அடுத்ததாக தன் மனைவி தான் உலகம் என்று மொத்த பாசத்தையும் கொட்டி வந்த நிலையில், விக்ரம் தலையில் அடிபட்டதால் பழையபடி ரக்கடுபாயாக மாறி பொண்டாட்டியை பார்த்து நீ யார் என்று கேள்வி கேட்ட இனியா நாடகம் தற்போது ஐந்தாவது இடத்தை பெற்று 8.68 ரேட்டிங்கை வாங்கி இருக்கிறது.

இதற்கு அடுத்து பல வருடங்களாக ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கனவுடன் போராடிக் கொண்டிருந்த சுந்தரி ஒரு வழியாக அவருடைய ஆசையை நிறைவேற்றி அதற்கான பாதையில் போய்க் கொண்டிருக்கும் சுந்தரி நாடகம் தற்போது நான்காவது இடத்தை பெற்று 9.89 ரேட்டிங்கை வாங்கி முன்னிலை வகித்திருக்கிறது.

Also read: குறி தப்பியதால் பலிகாடான கயல்விழி.. மகளுடன் கண்ணீர் கம்பளமாய் நிற்கதியாய் நிற்கும் ஜீவானந்தம்

அடுத்ததாக அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை வைத்து நகர்ந்து வந்த கதை. தற்போது கணவன் மனைவி பிரச்சினையால் எப்படி ஒன்று சேர்வது என்று முழித்து கொண்டிருக்கும் தங்கையை எப்படியாவது ஆசைப்பட்ட கணவருடன் சேர்த்து வைக்க போராடிவரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்து 10.7 ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

இதற்கடுத்து எப்போதுமே நாடகத்தின் சிம்ம சொப்பனமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் சீரியல் கடந்த பல மாதங்களாக முதலிடத்தை பிடித்து வந்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட தடுமாற்றங்களால் தற்போது இரண்டாவது இடத்திற்கு போய் 10.18 ரேட்டிங்கே பெற்று பின்னுக்கு சென்று விட்டது. அடுத்ததாக இடத்தில் சிங்க பெண்ணாக இருந்து குடும்பக் கஷ்டங்களையும் பாரங்களையும் சுகமாக சுமந்து கொண்டு போராடிக் கொண்டு வரும் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்து 10.53 ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

Also read: வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News