அவசரப்பட்டு ஏமாந்த கல்கி பட குழு.. ஆரம்பத்திலேயே 750 கோடிக்கு ஆப்பு வைக்கும் அணுகுண்டு

கல்கி படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. இன்று தான் இந்த படம் ரிலீஸ் என்பதே பல பேருக்கு தெரியாது. மேலும் இந்த படத்திற்கு ஒரு துளிகூட ப்ரோமோஷன் கிடையாது. மொத்தமாய் பட குழு இதில் மெத்தனம் காட்டிவிட்டது.

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக 750 கோடி செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டது. அப்பேர்ப்பட்ட பொருட்ச அளவில் உருவாக்கப்பட்டாலும் இந்த படத்திற்கான சரியான விளம்பரங்கள் எதுவும் செய்யவில்லை. தெலுங்கு சினிமாவின் மாஸ் அதிரடி ஹீரோ பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் என ஒரு பெரும் நடிப்பு அரக்கர்கள் இருந்தும் கோட்டை விட்டுவிட்டனர்.

தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் இந்த படம் ரிலீசான தியேட்டர்களில் எங்கும் கூட்டமே இல்லை. அது மட்டும் இன்றி இந்த படம் முதலில் 3D என கூறப்பட்டு அதற்கான டிக்கெட் காசுகளும் வசூலிக்கப்பட்டது ஆனால் இது 3D இல் இன்று வெளியாகவில்லை.

இந்து கடவுளான விஷ்ணுவின் நவீன அவதாரம், தீய சக்திகளிடமிருந்து உலகைப் பாதுகாக்க பூமியில் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பற்றிய கதைதான் இது. அதாவது வரவிருக்கும் 2898 AD காலகட்டங்களில் உலக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை காட்டும் படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் 750 கோடி பட்ஜெட்டுகளுக்கு இது ஒர்த்தான படமா என்று தெரியவில்லை. இந்த நிலைமை போனால், இந்த படம் முதலுக்கே மோசம் ஆகிவிடும். கமலுக்கு மட்டுமே இந்த படத்தில் ஒரு பெரும் தொகை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இப்போதைக்கு இரண்டு பாகங்கள் எடுப்பதாக திட்டமிட்டுள்ளனர்.

Next Story

- Advertisement -