யுத்தத்தில் வெற்றி என்பது மரணத்திற்கு தான்.. ஏலியன் தோற்றத்தில் கமல் மிரட்டும் கல்கி ட்ரெய்லர்

Kalki Trailer: நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கல்கி 27ஆம் தேதி வெளியாகிறது. கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பல சுவாரசியமான விஷயங்களை பேசினார்கள். அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ட்ரைலரை பட குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான முதல் ட்ரெய்லரில் கமல் வரும் காட்சி சில நொடிகள் மட்டுமே காட்டப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த இரண்டாவது ட்ரெய்லரில் அவருடைய முழு கெட்டப்பை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான்.

சர்ப்ரைஸ் கெட்டப்பில் இருக்கும் கமல்

அதன்படி உலகத்தை அழிக்க வேற்றுகிரக வாசிகள் வருகின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து மக்களையும் உலகத்தையும் காக்க கல்கி அவதாரம் எடுக்கப்படுகிறது. அதன்படி தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் குழந்தை தான் அந்த அவதாரம்.

அதை கமல் அழிக்க நினைக்கிறார். அவருக்கு துணையாக பிரபாஸ் இருக்கிறார். ஆனால் அமிதாப் பச்சன் அந்த குழந்தையை காப்பாற்ற போராடுகிறார். இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லரில் படத்தின் மொத்த கதையே தெரிகிறது.

ஆனால் ஆண்டவர் ஏலியன் போன்ற கெட்டப்பில் இருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி சண்டை காட்சிகள், சென்டிமென்ட் என இந்த ட்ரெய்லர் மிரட்டலாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.

அதே சமயம் ஒளிப்பதிவு, பிஜிஎம் என ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்த கல்கி நிச்சயம் உலக அளவில் மிகப் பெரும் கவனத்தை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹாலிவுட் தரத்தில் மிரட்ட வரும் கல்கி

Next Story

- Advertisement -