இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. 600 கோடி பட்ஜெட்டில் தல தப்புமா கல்கி.?

This Week Theater OTT Movies: கடந்த வாரம் தமிழில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியானது. அதில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் அமையவில்லை. அதைத்தொடர்ந்து இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளிவருகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

அந்த வகையில் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கல்கி 2898 AD நாளை ரிலீஸ் ஆகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசன் கலக்கி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் பிரம்மாண்டமாக இருந்தது.

அது மட்டும் இன்றி 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி பெரும் ஆரவாரத்துடன் வெளியாகும் இப்படம் ரிலீசுக்கு முன்பே ப்ரீ பிசினஸில் கல்லாகட்டி விட்டது.

அதை அடுத்து முதல் நாள் மற்றும் அடுத்தடுத்த வசூல் எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும். இதை அடுத்து ஓடிடி நிலவரத்தை பொருத்தவரையில் பிரித்விராஜின் குருவாயூர் ஆம்பள நடையில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

பெரும் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் இந்த தளத்தில் இந்தியன் 2 பட ரிலீஸை முன்னிட்டு அதன் முதல் பாகமும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வெப் தொடரான உப்பு புளி காரம் புது எபிசோடுகளும் வியாழக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் ஹார்ட் பீட் வெப் தொடரின் எபிசோட் வெள்ளிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது.

அடுத்ததாக அமீர் நடிப்பில் வெளியான உயிர் தமிழுக்கு படம் ஆகா தமிழ் ஓடிடியில் நேற்று வெளியானது. மேலும் ஐ சா த டெவில் என்ற கொரியன் படமும் தற்போது தமிழில் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படியாக இந்த வார இறுதி மேற்கண்ட படங்களால் கலை கட்ட இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படமும் 26 ஆம் தேதி தனுஷின் ராயன் படமும் தியேட்டர்களில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து வெளியாக இருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள்

Next Story

- Advertisement -