மனுஷனா, பிசாசா யாருக்கு தெரியும்.? பதட்டத்திலேயே வைத்துள்ள அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லர்

Aval Peyar Rajni: மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அவள் பெயர் ரஜ்னி என்ற படம் உருவாகி இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நமிதா பிரமோத், அஸ்வின் குமார், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் லோகேஷ் கலந்து கொண்டார். இந்நிலையில் நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் காட்சிகள் அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபகாலமாக காளிதாஸ் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த வகையில் இதுவரை அவர் நடித்திடாத புதிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ள இதில் பேய் பிசாசு மீது நம்பிக்கை உள்ளதா, மனுஷனா பிசாசா யாருக்கு தெரியும் என பயமுறுத்தும் வசனங்களும் இடம் பெற்று இருக்கிறது.

Also Read : விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?

மேலும் இந்த ட்ரெய்லரிலேயே நிறைய இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் சாயலை மறைமுகமாக படக்குழு காட்டி இருக்கிறார்கள். ஆகையால் படத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது.

இந்த ட்ரெய்லர் மூலம் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக காளிதாஸ் ஜெயராமின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அவள் பெயர் ரஜ்னி படம் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also Read : ரஜினி, கமல் படத்தால் நாசமாக்கப்பட்ட தியேட்டர்கள்.. பின் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய சம்பவம்