வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜீவானந்தம் மனைவிக்காக கண்ணீர் விட்டு கதறும் எக்ஸ் காதலி.. குணசேகரனை வேட்டையாட போகும் வேட்டை நாய்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் அனைவரும் பார்த்து வருகிறார்கள். இதில் குணசேகரின் அட்டூழியம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. தற்போது கோமா ஸ்டேஜில் இருந்து திரும்பி வந்த அப்பத்தாவிற்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்காமல் ரூமில் அடைத்து வைத்து ஜீவானந்தத்திற்கு எதிராக புகார் பண்ணுவதற்கு கையெழுத்தை வாங்கி விடுகிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை காலி பண்ண போன கும்பல் தவறுதலாக அவருடைய மனைவியை சுட்டு விட்டார்கள். இதனால் இவருடைய குடும்பம் சுக்குநூறாக உடைந்து போய் மகளுடன் தனிமரமாக இருந்து தவித்து வருகிறார். இதை நேரில் இருந்து பார்த்த ஜனனி ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து கண்கலங்கபடியே வீட்டுக்கு திரும்பி வருகிறார்.

Also read: பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!

அடுத்தபடியாக கதிர், வீட்டுக்கு வந்ததும் நந்தினி வாசலில் இருந்து குணசேகரன் பேசியதை சொல்லி உங்க அண்ணன் உங்களிடம் வைத்திருப்பது பாசமில்லை. அத்தனையும் சொத்தின் சுயநலத்திற்காக உங்களை வேட்டை நாயாக பயன்படுத்துகிறார் என்று அவரே சொல்லுகிறார். அத்துடன் என்னையும் கேவலப்படுத்தி கை ஓங்கி விட்டார் என்று சொல்லி கதிரை நியாயம் கேட்க சொல்கிறார்.

இதை கேட்ட கதிர் கண்ணில் அவ்வளவு கோபம் வெறி தெரிகிறது. இது அத்தனையும் வைத்து குணசேகரனிடம் ஏன் அவளை இப்படி பேசினீர்கள் என்று கொந்தளிப்புடன் கேட்கிறார். இந்த கதிர் உண்மையிலேயே திருந்தியதால் கேட்கிறாரா அல்லது எங்க போயிட்டு வந்து நிற்கிறாய் என்று நந்தினி கேட்டதற்கு சமாளிக்கும் விதமாக இப்படி நடந்து கொள்கிறாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

ஆனால் எது எப்படியோ குணசேகரனை கடைசியில் வேட்டையாடப் போகும் வேட்டை நாயாகத்தான் கதிர் கையால் அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. குணசேகரனின் உண்மையான சுயரூபத்தை தெரிந்தால் கண்டிப்பாக கதிர் திருந்துவதோடு மட்டுமில்லாமல் அவருக்கு முதல் எதிரியாக கூட மாறலாம். அடுத்தபடியாக ஜனனி வீட்டிற்கு வந்ததும் ஜீவானந்தத்திற்கு அழகான குடும்பம் இருக்கிறது.

ஆனால் யாரோ ஜீவானந்தத்தை பழி வாங்குவதற்காக அவருடைய மனைவியை கொன்று விட்டார்கள் என்று அழுது கொண்டே சொல்கிறார். இதை கேட்டதும் ஜீவானந்தத்தின் மனைவியை நினைத்து கண்ணீர் வடித்து கதறிக்கொண்டு அழுகிறார் அவருடைய எக்ஸ் காதலி ஈஸ்வரி. இதனைத் தொடர்ந்து ஜீவானந்தம் சில சதிகளால் ஜெயிலுக்கு போக நேரிடுகிறது. அப்பொழுது இவருடைய குழந்தையை அரவணைப்போடு பார்த்துக் கொள்வது ஈஸ்வரி ஆகத்தான் இருக்கும்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

- Advertisement -

Trending News