வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!

Ethirneechal Serial: பொழுதுபோக்கு நிகழ்ச்சியாய் பார்க்கப்படும் சீரியல்களில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் பெரிய தலைகளுக்கு குறி வைத்து கதை சொல்லிய சம்பவம் குறித்த தகவலை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

சின்னத்திரையில் பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல் சீரியலை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு கதையை சுவாரிசமாய் கொண்டு செல்லும் இயக்குனர் தான் திருசெல்வம். இவரின் சீரியல் என்றாலே அவை பெண்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. அவ்வாறு இவரின் திறமைக்கும், ஆர்வத்திற்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.

Also Read: பார்க்க தான் காமெடி பீஸ், நிஜத்தில் கோடீஸ்வரன்.. கலாநிதியை விட காஸ்ட்லி காரை வைத்திருக்கும் ஜெயிலர் பிரபலம்

ஆனால் இவரின் போதாத நேரம் சின்னத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் திரைப்பட கல்லூரியில் படித்து சினிமாவை முறைப்படி பயின்றாராம். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தமான ஒன்று.

மேலும் இசையில் ஆர்வம் கொண்டு சவுண்ட் இன்ஜினியர் ஆகவும் பணியாற்றினாராம். அவ்வாறு ஒருமுறை காதலுக்கு மரியாதை என்னும் படத்தில் இளையராஜா உடன் இணைந்து பணிபுரிந்து இருக்கிறாராம். அப்படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பினை கொண்டு விஜய் இடம் பழக்கம் ஏற்பட்டதாம்.

Also Read: அவசரத்துக்கு உதவாமல் கட்சி நடத்தி என்ன பிரயோஜனம்.. கமல் செய்யாததை செய்துக்காட்டிய கேப்டன்

அதைக் கொண்டு இயக்குனராய் விஜய் இடம் ஒரு கதை சொல்லி சம்மதமும் பெற்று விட்டாராம். ஏதோ ஒரு காரணத்தால் அவை தள்ளி போய்க் கொண்டே இருந்து, எடுக்க முடியாமல் போய்விட்டதாம். அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தால் இன்று அவர் சினிமாவில் மாபெரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்திருப்பார். அந்த ஆசை பறிபோன பிறகே கோலங்கள் சீரியல் மூலம் வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து ரஜினியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்.

அந்தக் கதையை கேட்டு விட்டு, இது பெண்கள் கதையாக இருக்கிறதே அப்பனா எனக்கு சொல்லுங்கள் என நக்கல் அடித்தாராம் ரஜினி. பிறகு முழு கதையும் கேட்டுவிட்டு இது போன்று தான் வள்ளி படத்தை எடுக்க ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது எனக் கூறினாராம். அவ்வாறு பல வருட காலமாய் தோல்வியை சந்தித்து தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் மூலம் வெற்றி கண்டு வரும் இவர் விரைவில் வெள்ளி திரையில் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கடைசி 5 படங்களில் ரஜினி குவித்த கோடிகள்.. ஷங்கர் பட கலெக்சனை தூக்கி சாப்பிட வைத்த நெல்சன்

- Advertisement -

Trending News