சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குணசேகரனின் ஆட்டத்தை முறியடிக்கும் மருமகள்கள்.. ஜீவானந்தத்தால் மீண்டும் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

Ethir Neechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ஆரம்பத்தில் இருந்தே டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் ஆதிரை கல்யாணம் என போரடிக்கும் அளவிற்கு இழுத்தடித்து விட்டார் இயக்குனர். அதோடு மட்டுமில்லாமல் அதிரைக்கு கரிகாலன் உடன் திருமணம் நடந்ததால் ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.

இப்போது மீண்டும் பழையபடி எதிர்நீச்சல் தொடர் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா இனி அரசாங்க பள்ளிக்கூடத்தில் தான் படிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதை நினைத்து ஜனனி பெருமைப்பட்டாலும், இதை கேட்க முடியாமல் அப்பத்தா இருக்கிறார் என்று கவலை கொள்கிறார்.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

இந்நிலையில் குணசேகரன் ஐஸ்வர்யா படிக்கவில்லை என்றாலும் தனியார் பள்ளிக்கூடத்தில் தான் படிக்க வைப்பேன் என்ற உறுதியாக இருக்கிறார். ஆனால் ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அரசாங்க பள்ளியில் சேர்க்க செல்கிறார்கள். அதுமட்டும்இன்றி இனிமேல் குணசேகரனை ஒரு மனுசனாகவே நினைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.

மேலும் அவரிடம் எந்த பர்மிஷனும் கேட்கக்கூடாது, இனி எல்லாமே இன்பர்மேஷன் தான் என்று கலக்குகிறார் ரேணுகா. மற்றொருபுறம் ஜனனியை பார்ப்பதற்காக அவரது நண்பர் கௌதம் வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் அப்பத்தாவின் 40% ஷேர் விஷயத்தில் ஒருவரின் பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கௌதம் இடம் சக்தி சொல்கிறார்.

Also Read : மூஞ்சிலயே தூக்கி எறிந்த பாக்கியா.. 2ம் பொண்டாட்டியுடன் தலைகுனிந்து வெளியேறிய கோபி அங்கிள்

அதை யார் என்று கௌதம் கேட்க, ஜனனி ஜீவானந்தம் என்ற பெயரை தான் அப்பத்தா அடிக்கடி கூறுகிறார் என சொல்லுகிறார். இதைக் கேட்ட கௌதம் ஒரு கணம் அப்படியே ஆச்சரியமடைந்து போகிறார். ஏனென்றால் அப்பத்தாவின் ஷேரை தனது பெயருக்கு மாற்ற வேண்டிய பொறுப்பை கௌதமிடம் ஜீவானந்தம் ஒப்படைத்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் குணசேகரன் வீட்டு முகவரியையும் கொடுத்து அங்கு என்ன நடக்கிறது இன்று பார்த்து விட்டு வா என ஜீவானந்தம் கூறியிருக்கிறார். இந்த சமயத்தில் ஜனனி ஜீவானந்தத்தை பற்றி விசாரிப்பதால் கௌதம் யாருக்கு விசுவாசமாக இருப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். இதனால் பல சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் இந்த வார எதிர்நீச்சல் தொடர் வர இருக்கிறது.

Also Read : எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கே டப் கொடுத்த குடும்ப சீரியல்.. கலைமாமணி விருது வென்ற முதல் தமிழ் சீரியல்

- Advertisement -

Trending News