ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

மூஞ்சிலயே தூக்கி எறிந்த பாக்கியா.. 2ம் பொண்டாட்டியுடன் தலைகுனிந்து வெளியேறிய கோபி அங்கிள்

Bhakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடுவில் சற்று மந்தமாக சென்று கொண்டிருந்த நிலையில் இப்போதுதான் சுவாரசியமான கதைக்களத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கோபி ஒரு மாதத்திற்குள் வீட்டின் மீதி தொகை 18 லட்சத்தை கொடுக்க வேண்டும் என பாக்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

பாக்யாவும் சபதத்தை ஏற்றுக் கொண்டு சொன்ன தேதியில் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். அதேபோல் பழனிச்சாமியால் மிகப்பெரிய ஆர்டர் ஒன்று பாக்யாவுக்கு கிடைத்தது. இதனால் மூன்றே நாளில் கிட்டத்தட்ட 7 லட்சம் பாக்யாவுக்கு கிடைத்திருக்கிறது. மேலும் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் பார்த்தால் 8 லட்சம் வந்துவிடும்.

Also Read : குக் வித் கோமாளி பைனல் லிஸ்ட்.. மீண்டும் வேலையை காட்டிய விஜய் டிவி

ஆகையால் மீதம் 10 லட்சத்திற்கு என்ன பண்ணுவது என்ற தெரியாமல் பாக்யா புலம்பி தவிக்கிறார். மறுநாள் கோபி பணத்தை எப்படியும் பாக்கியா தயார் செய்து இருக்க மாட்டார் என்ற நினைப்பில் அதிகாரம் பண்ணுகிறார். ஆனால் பாக்யாவோ மூஞ்சிலேயே விட்டு எறியாத குறையாக 18 லட்சம் மொத்தத்தையும் கொடுக்கிறார்.

ஆனால் இந்த வீட்டிலிருந்து போக மனம் இல்லாத கோபி ஏதாவது சாக்கு சொல்லுகிறார். ஆனால் ரோஷத்துடன் இருக்கும் ராதிகா வீட்டை விட்டு போகலாம் வாங்க என கோபியை கூப்பிடுகிறார். இதனால் கோபி அங்கிள் மற்றும் ராதிகா இருவரும் பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு பாக்யா வீட்டில் இருந்து வெளியே வருகிறார்கள்.

Also Read : பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

அந்த சமயத்தில் பாக்யா எழிலிடம் கேட்டை மூடுடா என ஜெயித்து விட்ட தோரணையில் மாஸ் காட்டுகிறார். இதைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியில் உறைகிறார் கோபி. மேலும் இந்த அவமானம் தாங்க முடியாமல் இனி ராதிகா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார். பாக்யாவிற்கு நிறைய குடைச்சல் கொடுக்க இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பாக்யா இந்த முழு தொகையையும் கொடுக்க பழனிச்சாமி தான் உதவி செய்து இருப்பார். அவரிடமிருந்து பெற்ற தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வேறு புதிய ஆடர்களை பாக்யா எடுக்கக்கூடும். அதிலும் பல பிரச்சனைகள் வர காத்திருக்கிறது. இவ்வாறு சுவாரஸ்யமான கதைகளைத்துடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Also Read : ராகவா லாரன்சுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி பாலா.. 5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்

- Advertisement -spot_img

Trending News