பல வருடமாக கிடப்பில் போட்ட படம்.. தோல்வி பயத்தால் மீண்டும் கையில் எடுத்த ஜெயம் ரவி

ஜெயம் ரவிக்கு சில காலமாக படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில் பொன்னியின் செல்வன் படம் அவரது மார்க்கெட்டை தூக்கி விட்டுள்ளது. இந்த சூழலில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.

இப்போது அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாம்.

Also Read : சமீபத்தில் ஹிட் கொடுக்க திணறி வரும் 5 ஹீரோக்கள்.. கும்பலோடு கோவிந்தா போடும் ஜெயம் ரவி

இப்போது ஜெயம் ரவி கிடப்பில் போட்ட ஒரு படத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது இறைவன் படத்திற்கு முன்னதாகவே அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி ஜன கண மன என்ற படத்தில் கமிட்டானார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி ஒப்பந்தமாகி மாதிரி இருந்தார்.

மேலும் ரகுமான், அர்ஜுன், எம் எஸ் பாஸ்கர் போன்ற நடிகர்களும் இந்த படத்தில் நடித்து வந்தார்கள். அதுவும் 2019ல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அப்போது கோவிட் தொற்று காரணமாக ஜன கண மன படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Also Read : பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவியின் 32 வது படம்.. தெலுங்கு நடிகைக்கு வலை வீசிய படக்குழு

ஆனால் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் ஜெயம் ரவி வேறு படங்களில் நடித்து வந்தார். அப்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி பிசியாக இருந்து கொண்டிருந்தார். அதன்பிறகு இந்த படத்தை மீண்டும் தொடங்குவார் என எதிர்பார்த்த நிலையில் இதே கூட்டணியில் இறைவன் படம் உருவானது.

இப்போது தொடர் வெற்றி படங்கள் கொடுத்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பதால் மீண்டும் கிடப்பில் போட்ட ஜன கண மன படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 50 நாட்கள் கால்ஷீட்டை மொத்தமாக ஜெயம் ரவி கொடுத்துள்ளாராம். ஆகையால் ஒரே கட்டமாக இந்த படத்தை எடுக்க முடிக்க உள்ளனர்.

Also Read : முறையாக பரதநாட்டியம் கத்துக்கிட்ட 5 நடிகர்கள்.. அரங்கேற்றம் வரை அடிச்சு தூக்கிய ஜெயம் ரவி

Next Story

- Advertisement -