முறையாக பரதநாட்டியம் கத்துக்கிட்ட 5 நடிகர்கள்.. அரங்கேற்றம் வரை அடிச்சு தூக்கிய ஜெயம் ரவி

பொதுவாகவே நடிகர்களுக்கு பக்க பலமாக இருப்பது அவர்களுடைய டான்ஸ் என்று சொல்லலாம். அவர்கள் பாடல்களுக்கு ஆடுவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருப்பார்கள். அந்த வகையில் சினிமாவிற்கு முறையாக நடனத்தை கற்றுக் கொண்ட சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

நகுல்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் நகுல் சினிமாவிற்கு என்ட்ரி ஆனார். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, காந்தக்கோட்டை, செய் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவருடைய நடனம் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அத்துடன் இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞர். அதிலும் இவர் “நாக்க முக்கா” பாடலில் மிகவும் எனர்ஜியுடன் ஆடி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.

Also read: 100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

ஜெயம் ரவி: இவர் சினிமாவிற்கு தந்தையின் தயாரிப்பிலும் சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், சம்திங் சம்திங், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஹீரோவாக மாறிவிட்டார். இவருடைய மிகப்பெரிய சிறப்பு இவர் ஆடும் நடனம் தான். இது பல பெண் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறார். இவர் அரங்கேற்றம் பண்ணும் அளவிற்கு முறையாக கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக் கொண்டவர்.

சாந்தனு: இவர் சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கண்டேன், கசடதபற, முருங்கைக்காய் சிப்ஸ், போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய அப்பா பாக்கியராஜ் நடித்த படங்களில் இவருக்கு டான்ஸ் வராது என்று கிண்டல் அடித்த காரணத்திற்காக அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முறையாக டான்ஸ் கற்றுக்கொண்டு வந்தார்.

Also read: கமலின் கனவு படத்தில் நடிக்க துணிந்த விக்ரம்.. உண்மையை போட்டுடைத்த விக்ரம் பட ஏஜென்ட்

கமல்: இவர் 12 வயதில் இருக்கும் போது நடன கலையை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறார். இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்து இப்பொழுது ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வந்திருக்கிறார். பொதுவாக இவருடைய படங்களில் இவர் ஆடும் டான்ஸ் சற்றும் வித்தியாசமாகவும் மக்களை ஈர்க்கும் வகையில் தான் நடனம் ஆடி இருப்பார்.

வினீத்: இவர் பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றுக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவருடைய ஆறாவது வயதிலேயே பரதநாட்டிய நடனத்தை கற்றுக் கொண்டவர். இதற்காக பல நடன பரிசுகளை பெற்றிருக்கிறார். அத்துடன் நடிப்பிலும் ஆர்வம் இருந்ததால் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.

Also read: சந்திரமுகியில் நடித்த வினித் என்ன ஆனார்.! தற்போதைய நிலை என்ன.?

Sharing Is Caring:

அதிகம் படித்தவை