ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வைத்த முதல் படம்.. இருந்த கெட்ட பெயர் மொத்தத்தையும் அழித்துக் காட்டிய தலைவர்

Rajini First Opening Song: தற்போது சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருக்கும் ரஜினி ஆரம்ப கட்டத்தில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி தான் வந்திருக்கிறார். அதுவும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு பலரும் கேலி பண்ணும் அளவிற்கு இவருடைய நிலைமை இருந்திருக்கிறது. அதாவது இவருக்கும் எம்ஜிஆருக்கும் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.

அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று புரியாமல் கையில் கிடைக்கும் பொருள்களை தூக்கி எறிந்து விடுவாராம். அதே மாதிரி படப்பிடிப்புக்கு வந்தாலும் நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே ஏதோ ஒரு யோசனையில் வெறித்தனமாக கத்தி அங்கிருக்கும் பொருள்களை தூக்கி எறிந்து இருக்கிறார்.

இந்த ஒரு விஷயம் அப்பொழுது பல சர்ச்சைகளை உண்டாக்கி இவருடைய பெயர் டேமேஜ் ஆகும் அளவிற்கு போய் இருக்கிறது. அதனாலேயே ஒரு கட்டத்தில் பைத்தியம் போல் இருந்திருக்கிறார். அப்பொழுது அன்னை ஒரு ஆலயம் படத்தில் ஆறு மாதமாக மனநோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்திருப்பார்.

Also read: ரஜினியவே யோசிச்ச சன் பிக்சர்ஸ்.. லோகேஷை சும்மாவா விடுவாங்க?.

ஆனால் உண்மையாகவே அந்த நேரத்தில் அவர் மன அழுத்தத்தினால் கொஞ்சம் குழம்பிப் போய் இருந்திருக்கிறார். அதனாலேயே பலரும் இவரை மெண்டல் என்றும் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு இதை உணர்ந்த ரஜினி இப்படியே போனால் கேரியரே போய்விடும் என்று நினைத்திருக்கிறார்.

அதனால் இதிலிருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளில் முயற்சித்து இருக்கிறார். அப்பொழுது கண்ணதாசன் இடம் எனக்கு ஏற்ற மாதிரி ஒரு ஓபனிங் சாங் வையுங்கள். அதன் மூலம் அனைவருக்கும் நான் பதிலடி கொடுக்க வேண்டும். அத்துடன் அந்த பாடல் மூலம் அடுத்த கட்ட லெவலுக்கு போக வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதனால் பில்லா படத்தில் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதி எம்எஸ் விசுவநாதன் இசையமைத்த “நாட்டுக்குள்ள எனக்கொரு பெயர் உண்டு, என்ன பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க”, என்று வரிகளுடன் ஓப்பனிங் சாங் வைக்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரி இந்தப் பாடல் மூலம் ரஜினி எதிர்பார்த்த மாதிரி இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

Also read: சிக்னல் காட்டிய ரஜினி, சிட்டாய் பறந்த இயக்குனர்.. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா