80 வயது வரை கம்பீரமாக இருந்த 5 நடிகர்கள்..! இந்த தந்திரகாரனுக்கு மாப்பிள்ளை தோழனாக மாறிய எம் ஜி ஆர்

Interesting anecdotes of late legendary tamil actors: சினிமா என்பது ஒரு மேஜிக். பார்ப்பவர்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் ஏன் அழ வைக்கவும் கூட செய்திருக்கிறது. இந்த ஊடகத்தின் வழியே கலைஞர்கள் மக்களின் மனதில் புகுந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். அதேசமயம் அவர்களை இழக்கும் போது மக்கள் தன்னை அறியாமல் கண்ணீர் விடவும் செய்து இருக்கிறார்கள்.

நம் உணர்வுகளோடு ஒன்றாக கலந்த நடிகர்கள் 60 வயதை கூட தாண்ட முடியாமல் போவது தான் வருத்தத்தின் உச்சம். இத்தகைய நடிகர்களுக்கு மத்தியில் 80 என்பதை கடந்தும் ஆரோக்கியமாக கலைப் பணியை மேற்கொண்ட நடிகர்களை பற்றி காண்போம்.

வி எஸ் ராகவன்: விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா பிரேயர் பண்ணுங்க சொல்வாருல அந்த தாத்தாதான் விஎஸ் ராகவன். 1500 படத்துக்கு மேல நடிச்சவரு, தன்னோட வசன உச்சரிப்பால் நிறைய மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்க்கு ரோல் மாடலா இருந்தவரு இந்த தாத்தா தான். 89 வயதை கடந்த விஎஸ் ராகவன் ஐயா 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்தார்.

எஸ் எஸ் ராஜேந்திரன்: பத்து வயதில் நடிக்க ஆரம்பித்த லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் சிவாஜி உடன் பராசக்தியில் அறிமுகமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர் தன் வாழ்வின் இறுதிவரை  பக்தி படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தார்.

Also read: பாதியிலேயே நின்று போன சிவாஜியின் படம்.. தேடி வந்து நடித்துக் கொடுத்து உதவி செய்த எம் ஜி ஆர்

ஜெமினி கணேசன்: அந்த காலத்தில் பெண்கள் மனம் கவரும் பேரழகராகவும் ரீல் லைப்பில் மட்டுமல்லாமல் ரியல் லைஃப்பிலும் காதல் மன்னனாக கன்னியரை கவர்ந்தவர் ஜெமினி கணேசன்.  எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டிருந்தவர் ஜெமினி கணேசன். வயதான பின்பும் தமிழ் படங்களில் நடித்திருந்த அவர் 84 வயதில் அமரரானார்.

நம்பியார்: 89 வயது வரை வாழ்ந்த இவர் எம்ஜிஆர் காலத்தில் கிளாசிக் படங்களில் முதன்மையான வில்லனாக விளங்கியவர். கையை கசக்கி கொண்டு தந்திரகாரனாக வரும் நம்பியாரின் வில்லத்தனம் பார்த்து ரியல் ஆகவும் மக்கள் இவரை கண்டு அஞ்சினர். எம்ஜிஆரை விட வயது குறைந்தவரான இவரின் திருமணத்திற்கு எம்ஜிஆர் மாப்பிள்ளை தோழனாக அமைந்தது சுவாரசியமான நிகழ்வு.

சோ: 82 வயதிலும் கம்பீரத்துடன் வாழ்ந்த அரசியல் ஆலோசகர் சோ ராமசாமி அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மானசீகமான குரு ஆவார்.  கிளாசிக் படங்களில் காமெடி டிராக்கை தேர்ந்தெடுத்தவர் ரியல் லைப்பில் யாருக்கும் அஞ்சாத தனது கருத்துக்களை தைரியத்துடன் முன் வைக்கும் முற்போக்குவாதி ஆவார்.

Also read: போலீஸ் படம்னா இதுதான்னு காட்டிய 5 நடிகர்கள்.. ஜெயலலிதாவிடம் காட்ட பயந்த இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்