புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கணவரை காப்பாற்ற போராடிவரும் இனியா.. சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளும் விக்ரம்

ரொம்பவே விறுவிறுப்பாக சூடு பிடித்துக் கொண்டு போகிறது இனியா சீரியல். என்னதான் புரிந்து கொண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் தன் கணவர் தப்பு செய்துவிட்டார் என்று தெரிந்ததும் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று போலீஸிடம் ஒப்படைத்த இனியா பெரிய கிரியேட் தான். என்று சொல்லணும்னு ஆசை தான் ஆனால் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை இனியா.

விக்ரம் சொல்வதை கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளாத இனியா தற்போது மட்டும் அவர் மேலே தப்பில்லை என்று நினைத்து அதுவும் ராஜேஷ் உயிரோடு தான் இருக்கிறார் என்று தெரிந்த பிறகும் விக்ரமை பார்த்து பேசவில்லை. ஆனால் சோனாலி உடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராஜேஷை தேடி அலைகிறார். இன்னொரு பக்கம் இது விக்ரமுக்கு சாதகமாகவும் அமையும்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரொம்ப புத்திசாலி என்று நினைப்பில் ராஜேஷ் கொடுத்த குழு வை வைத்து கண்டுபிடிக்க ரெடியாகும் இனியா அவர் போகும் கார் நம்பரை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று இனியாவுக்கு தோணாமல் போய்விட்டது. எது எப்படியோ கூடிய சீக்கிரத்தில் ராஜேஷ் கண்டுபிடித்து விக்ரம் வெளிய வந்தால் போதும். ஆனால் அதற்குள்ள விக்ரம் ஜெயிலில் வேற சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டார்.

இதையும் இனியா நம்ப போகிறாரா அல்லது விக்ரமுக்கு சப்போர்ட்டாக இருக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. இதையெல்லாம் தாண்டி இனியா ராஜேஷ் இருக்கும் இடம் வரை கண்டுபிடித்து வந்து விட்டார். பாவம் இவர்களுக்கிடையே நடுவில் இவருடைய அக்கா மற்றும் விக்ரமின் தம்பி வாழ்க்கை கேள்விக்குறியாக போய்விட்டது.

Also read: சொர்ணா அக்காவை மிஞ்சிய ராதிகா.. பிள்ளை பூச்சியாக வேடிக்கை பார்க்கும் பாக்யா கோபி

ஜெயிலில் விக்ரமுக்கு ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று தெரியும் ஆனால் மறுபடியும் இன்னொரு கொலை கேசில் மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை. விக்ரமை பார்ப்பதற்கு ரொம்பவே பாவமாக இருக்கிறது. அவருக்காக தான் இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகமானவர் இருக்கிறார்கள்.

அதை தெரிந்து கொண்டுதான் விக்ரமுக்கு தொடர்ந்து பிரச்சினையை ஏற்படுத்தி மக்களை ஆர்வமாக பார்க்க வைக்கிறார்கள். எல்லா பிரச்சனையும் சரி செய்து விக்ரம் வெளியில் வந்து இனியாவுடன் சேர்ந்து வாழ்வாரா அல்லது வழக்கம் போல் இனியா இவரை புரிந்து கொள்ளாமல் தவிக்க விடப் போகிறாரா என்று இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Also read: குணசேகரனின் ட்ரிக்கே ஃபாலோ செய்யும் ஜனனி.. விறுவிறுப்பான ட்விஸ்ட்டுடன் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News