பெரிய நடிகைகள் எல்லாம் இந்த பொண்ணு கிட்ட கத்துக்கணும்.. கல்யாணத்தை வியாபாரம் ஆக்கிய ரோபோ பாண்டியம்மா

Indraja Shankar Wedding: வாயுள்ள புள்ள எப்படியாச்சும் பொழச்சிக்கும்னு ஒரு பழமொழி சொல்வாங்க. அது நம்ம ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா விஷயத்தில் சரியா போச்சு. ஒரு பக்கம் கல்யாண வேலைல பிசியா இருந்தாலும், இன்னொரு பக்கம் காசு விஷயத்தில் ரொம்ப கறாரா இருக்கு பா இந்த பொண்ணு. பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் நம்ம பிகில் பாண்டியம்மா கிட்ட டியூசன் வரணும் போல இந்த விஷயத்தில்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் தான் பிரபலம். அவருடைய உடலமைப்பிற்கு, அவர் ஆடும் வேகம் தான் எல்லோரையும் கவர்ந்தது. அதன் பின்னர் ரோபோவுடன் நிறைய பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்தார். இந்த அப்பா பொண்ணு காம்போ நிறைய லைக்ஸ்களை அள்ளி குவித்தது.

இதைத்தொடர்ந்து தான் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இந்திரஜாவுக்கு கிடைத்தது. அப்பாவை போலவே காமெடியில் பின்னி பெடல் எடுத்தார் பாண்டியம்மா. கார்த்தி மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்த விருமன் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களில் நடித்த கையோடு யூடியூப் சேனல்களில் நிறைய பேட்டிகளும் கொடுக்க ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பதால் இந்திரஜாவுக்கு நிறைய விளம்பரங்களும் வரும். இப்படி அடுத்தடுத்து படங்கள் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளம் மூலம் சம்பாதித்துக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் நெருங்கிய உறவினர் கார்த்திக் என்பவருடன் இந்திரஜாவுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது திருமண வேலைகள் ஆரம்பித்து சகல வைபவங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.

கல்யாணத்தை வியாபாரம் ஆக்கிய இந்திரஜா

இந்திரஜா மற்றும் கார்த்திக் இணையர்களுக்கு நேற்று ஹால்டி கொண்டாட்டம் நடைபெற்றது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. அதை தொடர்ந்து பிரபல யுடியூப் நிறுவனம் ஒன்று இந்திரஜாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அவர்களிடம் தான் மொத்த காப்பிரைட் இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இதனால் இந்திரஜாவின் திருமண வைபவங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த சேனலில் மட்டும் தான் வெளியாகும். இந்திரஜா இந்த சேனலுக்கு நல்ல ரேட்டில் பேசி தன்னுடைய திருமணத்தையும் பணமாக்கி இருப்பது இதன் மூலம் வெளியில் தெரிந்திருக்கிறது.

பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் தங்களுடைய திருமணத்தை காதும் காதும் வைத்த மாதிரி சைலன்டாக நடத்தி முடிக்கிறார்கள். ஆனால் இந்திரஜா இந்த வயசிலேயே படு விவரமாக இருக்கிறார். திருமணத்தைக் கூட நல்ல வியாபாரமாக்கும் அளவுக்கு கைதேர்ந்து விட்டார் பாண்டியம்மா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்