திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

பினிஷிங் ரோல் இனி உங்களுக்கு தான்.. தினேஷ் கார்த்திக்கு போட்டியாக ரோஹித் வளர்த்துவரும் வீரர்

எப்பொழுதுமே கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஒரு தனி இடம் உண்டு. இந்திய அணியின் ரிசர்வுடு பிளேயர் என பல பெயர் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது மூன்று விதமான போட்டிகளுக்கும் ஒவ்வொரு அணி களம் இறங்குகிறது.

சுழற்சி முறையில் இந்திய அணி களம் காண்கிறது. ஒரு போட்டியில் ஒருவர் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அடுத்த போட்டியில் அவருக்கு மேலும் அழுத்தம் ஏற்படுகிறது. அந்த போட்டியிலும் விளையாட வில்லை என்றால் அவர் இடத்திற்கு வேறு ஒருவர் வந்து விடுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்திய அணி விளையாடி வருகின்றது.

Also read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

வெங்கடேச ஐயர், ப்ரீத்திவ் ஷா போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் பெஞ்ஜில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களும் அடுத்த தொடர் வாய்ப்புக்காக ஏங்கி வருகின்றனர். இப்பொழுது பழைய அணியில் யாரேனும் ஒருவர் விளையாடவில்லை என்றால் அவர்கள் வாய்ப்பு மறுக்கப்படும்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் இந்திய அணி வருங்கால உலகக்கோப்பையை மனதில் கொண்டு பல இளம் வீரர்களை வளர்த்து வருகிறது. அதில் ஒருவர்தான் கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன். இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்பு கொடுத்தார்கள், ஆனால் இவர் சோபிக்க தவறிவிட்டார்.

Also read: சென்னை அணி கோப்பை வெல்ல கமலே காரணம்.. சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறிய தகவல்

சஞ்சு சாம்சன் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இப்பொழுது இவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 50 ஓவர் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

சஞ்சு சாம்சனுக்கு எப்பொழுதுமே ரோகித் சர்மா சப்போர்ட் செய்வார். இப்பொழுது இவரை ஒரு மேட்ச் பினிஷராக செயல்படுமாறு கூறியுள்ளார் ரோகித் சர்மா. சமீபகாலமாக போட்டியை முடித்துக் கொடுப்பதில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அவருக்கு போட்டியாக சஞ்சு சாம்சன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read: ஜொள்ளு விடவைக்கும் 5 கிரிக்கெட் தொகுப்பாளர்கள்.. அரேபிய குதிரை போல் காட்சியளிக்கும் மாயந்தி

Advertisement Amazon Prime Banner

Trending News