இனிமேல் நடிக்க மாட்டேன்.. ஸ்டைலிஷ் இயக்குனரின் உச்சகட்ட விரக்தி

Director Gautham Vasudev Menon: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதை விட இப்போது அதிகம் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு, சூரி- விஜய் சேதுபதி நடித்த விடுதலை, தளபதி விஜய்யின் லியோ என டாப் ஹீரோக்களின் படங்களில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனால் இப்போது அவருக்கு ஸ்டைலிஷ் டைரக்டர் என்ற பெயர் அவரிடம் இல்லை. இவர் நடிகராக பிறகு பணம் கை நிறைய வருகிறது, ஆனால் அவருடைய நடிப்பிற்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால் இப்போது கௌதம் மேனன் அதிரடி முடிவெடுத்திருக்கிறார்.

இனிமேல் நடிக்க போவதில்லை என்று கூறி வருகிறார்.  ஆனால் இவர் நடித்த படங்களின் பார்ட் 2 படங்கள் வந்தால் நடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த வகையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விடுதலை 2 படத்தில் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்.

Also Read: துருவ நட்சத்திரம் படத்திற்கு கௌதம் மேனனின் சாய்ஸ்.. விக்ரமுக்கு முன்பு லிஸ்டில் இருந்த 2 ஹீரோக்கள்

ஸ்டைலிஷ் இயக்குனரின் விரக்தி

அது மட்டுமல்ல இவர் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள படங்களை இயக்குவதில் மும்முரம் காட்டுகிறார். அவருடைய சொந்த தயாரிப்பில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த ஷூட்டிங் கடந்து 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின்பு முடங்கியது.

அதன் பின் கடந்த வருடம் தூசி தட்டி கையில் எடுத்த கௌதம் மேனன் முழு மூச்சா எடுத்து முடித்தார். இந்த படத்திற்காக கெட்ட வார்த்தைகளில் எல்லாம் கௌதம் மேனன் ப்ரோமோஷன் செய்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இந்த படம் துவங்கப்பட்டு அதிக ஆண்டுகள் ஆன போதிலும் பழைய படம் என ரசிகர்கள் நினைத்திடக்கூடாது என்பதற்காகவே, கதைக்களத்திலும் தொழில்நுட்பத்திலும் நிறைய மாற்றங்களை செய்து இருக்கிறார். இந்த படம் தற்போதைய படம் போலவே ரசிகர்களுக்கு சிறப்பான திரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் என்று கௌதம் மேனன் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Also Read: கெட்ட வார்த்தையில் ப்ரோமோஷன் செஞ்சா மட்டும் படம் ஓடிடுமா? கௌதம் மேனனை கிழித்து தொங்க விட்ட பிரபலம்