நயன்தாரா போல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. மேடையில் அதிரடியாக பேசிய நடிகை

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் இவருடைய இடத்தை எப்படியாவது தட்டிப் பறிக்க வேண்டும் என்று பல இளம் நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர்.

அதில் தனக்கென ஒரு பாணியில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் இவருக்கு நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் இவர் நயன்தாராவை ஓரம் கட்டும் வகையில் கதையின் நாயகியாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Also read : நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய திரிஷா.. எதிரும் குந்தவை மார்க்கெட்

ஏனென்றால் ஆரம்ப காலத்தில் ஹீரோக்களுடன் டூயட் பாடி நடித்து வந்த நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி வெளியாகும் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரை பார்த்து தான் முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் அது போன்ற கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷை நயன்தாராவுடன் ஒப்பிட்டு ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தது. தற்போது அந்த சர்ச்சை கருத்துக்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மேடையில் இது பற்றி கூறியிருக்கிறார்.

Also read : நிஜத்துல வேணும், ஆனா சினிமால அந்த அசிங்கம் வேணாம்.. 4 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த நயன்தாரா.!

நவம்பர் பதினொன்றாம் தேதி வெளியாக இருக்கும் அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பவர்ஃபுல் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சண்டைக் காட்சிகளில் கூட அவர் டூப் எதுவும் போடாமல் நடித்திருப்பதும் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. அப்படத்தை பற்றி பேசி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்னுடைய பல திரைப்படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். பெரிய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சிறிய பட்ஜெட் படங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நான் நயன்தாரா பாணியில் நடித்து வருவதாக கூறுகின்றனர். அதற்கான அவசியம் எனக்கு கிடையாது. எனக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது என்று அவர் அதிரடியாக கூறியிருக்கிறார்.

Also read : உனக்கு நெஜமாவே அது இருக்கா.? நயன்தாராவை அவமானப்படுத்திய பிருந்தா மாஸ்டர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்