படமே ஓடாவிட்டாலும் நடித்து தள்ளும் ஹிப்ஹாப் ஆதி.. அட ராமா கைவசம் இத்தனை படங்களா?

Hiphop Adhi: இசையமைப்பாளர்கள் ஹீரோ அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஹிப்ஹாப் ஆதியும் தனக்கான ஒரு இடத்தை பெற்று வருகிறார். அதில் அவர் ஆரம்பத்தில் நடித்த நட்பே துணை, மீசைய முறுக்கு போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் அதன் பிறகு வந்த சிவகாமியின் சபதம், அன்பறிவு போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதிலும் சமீபத்தில் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து ஆதி நடித்திருந்த வீரன் படமும் சுமாரான வரவேற்பை தான் பெற்றது.

Also read: தியேட்டர் ஓனர்களை காலை வாரிவிட்ட ஹிப்ஹாப் ஆதி.. நம்பி மோசம் போயிட்டோம் என புலம்பல்

ஆனாலும் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறார். பொதுவாக ஒரு ஹீரோவுக்கு படம் ஓடவில்லை என்றால் அவருடைய மார்க்கெட்டே காலியாகி விடும். ஆனால் இவருக்கோ பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இதுதான் இப்போது வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோக்களுக்கு கடுப்பை வரவழைத்து இருக்கிறது. அந்த வகையில் ஆதியின் கைவசம் இப்போது ஆறு, ஏழு ப்ராஜெக்ட் இருக்கிறது. அதில் மூன்று வெப் சீரிஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: கேப்டன் மில்லருக்கு ரெண்டு கதை சொல்லி இருக்கேன்.. விளம்பரம் தேடும் ஹிப்ஹாப் ஆதி இயக்குனர்

மேலும் சில படங்களில் நடிக்கவும் இவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பி டி சார் படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

இப்படி தோல்வி படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து நடித்து தள்ளும் ஆதி சந்தானத்தை நினைவுபடுத்துகிறார். ஏனென்றால் ஹீரோவாக நடிக்க வந்த பிறகு அவரும் பல தோல்விகளை கொடுத்தார். ஆனாலும் துவண்டு போகாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆதியும் விரைவில் ஒரு வெற்றியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்

- Advertisement -spot_img

Trending News