ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஓட்டல.. குணசேகரனுக்கு எதிராக ஓங்கும் கைகள்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது வேற ரூட்டுக்கு மாறி இருக்கிறது. அண்ணன் தான் உலகம் அண்ணன் தான் தெய்வம் நின்று வாழ்ந்து வந்த தம்பிகள் தற்போது அவருக்கு எதிராக காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.

ஒரு பக்கம் ஈஸ்வரி தன் மகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். மறுபக்கம் குணசேகரனின் வீடு பிளவு பட்டு கிடக்கிறது. கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோடு போடு என விசு சொல்வது போல் இருந்தது குணசேகரனின் நடவடிக்கை.

நேற்றைய எபிசோடில் யாரும் வீட்டை விட்டு வெளியே கூடாது. இங்கிருந்தே சவாலில் ஜெயித்து காட்டுங்கள் என அவர் சொல்கிறார். மேலும் வீட்டில் தங்கலாம் ஆனால் ஒரு பொருளை கூடாது என தன் அரக்க குணத்தையும் காட்டுகிறார்.

Also read: அடங்க மறுக்கும் கலிவரதன் மகன்! இன்னமும் அர்ஜுனுக்கு சப்போர்ட் பண்ணும் முட்டாபீசு ராகினி!

அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தாரா குட்டி தன் அம்மா கழுத்தில் இருக்கும் நகையை கழட்டி பெரியப்பாவிடம் கொடுக்கிறார். உடனே குணசேகரன் என்னை அவமானப்படுத்துகிறீர்களா? என கொந்தளிக்கிறார்.

மேலும் குணசேகரனை பகைத்துக் கொண்ட எவரும் வாழ முடியாது என திமிருடன் பேசுகிறார். இதை பார்க்கும் போதே குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல என்ற கதையாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் இப்படி பேசுகிறார்.

ஆக மொத்தம் குணசேகருக்கு எதிராக ஓங்கி இருக்கும் கைகளால் சீரியல் பரபரப்பாக மாறி இருக்கிறது. மேலும் தர்ஷினி திரும்பி வந்து உண்மையை சொன்னால் குணசேகரனின் ஆட்டம் அடங்கி போய் விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: அப்பாவிடம் உண்மையை சொல்லப் போகும் முத்து.. தம்பியின் லட்சணம் என்னவென்று மீனாக்கு தெரிய வருமா?

- Advertisement -spot_img

Trending News