அடங்க மறுக்கும் கலிவரதன் மகன்! இன்னமும் அர்ஜுனுக்கு சப்போர்ட் பண்ணும் முட்டாபீசு ராகினி!

Thamizhum Saraswathiyum serial Update Ragini blindly support to arjun: விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்களாக சரஸ்வதி ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வீட்டிற்கு வந்த போதும் இன்னமும் ஜெயிலின் கடினமான நினைவுகளால் புண்பட்டு போகிறார்.

சரஸ்வதியின் இந்த காயத்தை ஆற்றும் பொருட்டு தமிழ் தனது குடும்பத்தினருடன் கலந்து பேசி சரஸ்வதியை சந்தோஷமாக வைக்க திட்டமிடுகிறார்கள் முதல் காரியமாக அறை முழுவதும் குழந்தைகள் புகைப்படத்தை ஒட்டி வைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத சரஸ்வதி சந்தோஷ கடலில் மூழ்குகிறார்.

மீண்டும்  ஜெயிலில் நடந்தவற்றை, கசப்பான அனுபவங்களை குடும்பத்தினருடன் விவரிக்கிறார் சரஸ்வதி. தூங்கும் போது வார்டன் தண்ணீர் ஊற்றி எழுப்பியதை கூறியதும் குடும்பத்தினர் கொந்தளிக்கின்றனர். அந்த நேரம் பார்த்து ராகினி வந்து சேர அர்ஜுன் மற்றும் நடேசன் இதற்கெல்லாம் காரணம் உன் புருஷன் அர்ஜுன் தான் என்று கைகாட்டுகின்றனர்.

Also read: நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது.. சினேகன் கொடுத்த பரபரப்பு பேட்டி

கணவனின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையினால் அர்ஜூனுக்கு சப்போர்ட் செய்து அண்ணனிடமும் அப்பாவிடமும் வாங்கி கட்டி கொள்கிறார் ராகினி. ஒரு வழியாக பஞ்சாயத்தை முடித்துவிட்டு அனைவரும் சரஸ்வதிக்கு ஊட்டி விட்டு சாப்பிட வைத்து சரஸ்வதியை ஆனந்த கண்ணீரில் திக்கு முக்காட வைத்து வைக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க அர்ஜுனும் அவனது மாமாவும் ஜெயிலில் கலிவரதனையும் அவரது மகனையும் சந்திக்கின்றனர். எங்களை எப்படியாவது வெளியில கொண்டு வாங்க என்று கெஞ்சுகின்றனர் இருவரும். தப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்க! நீங்க எப்படி வெளியில வருவீங்க என்று நக்கல் அடிக்கிறார் அர்ஜுனனின் மாமா.

இந்த சின்ன வயசுல காலம் முழுதும் இங்க ஜெயில்ல கஷ்டப்பட முடியாது என கொதிக்கிறார் கலிவரதனின் மகன். பெயில்லவாது எடுங்க என கூறும் கலிவர்தனை ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டு செல்கின்றார் அர்ஜுன். அர்ஜுனனின் வீட்டிலும் சரஸ்வதி வெளியே வந்ததை பற்றி கடுப்பில் இருக்கின்றனர் அர்ஜுனனின் அக்காவும் அம்மாவும். கலிவரதன் வெளியே வருவாரா? அர்ஜூனின் உண்மை முகம் கிழிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: விரட்டி அடிக்கப்படும் ராஜி.. பாண்டியன் குடும்பத்தையே சீர்குலைக்கும் மருமகள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்