எல்லாத்துக்கும் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டிய ஹச் வினோத்.. மொத்த செட்யூலையும் ஓகே பண்ணிய தளபதி!

H Vinoth interfered with the thalapathy vijay’s orders: சினிமாவில் அதிக அளவு ஆக்சன் படங்களை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

வன்முறைச் சத்தம் காதை பிளக்க, பரபரப்பான ஆக்சன் காட்சிகளுடன் வசூலை எதிர்நோக்கியே இருக்கிறது இயக்குனர்களின் பயணம்.

இவ்வாறு ஆக்சன் காட்சிகளால் வெற்றியை வசமாக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில்,

நடைமுறை வாழ்வில் சாமானியனுக்கு ஏற்படும் அநீதிகளையும், செய்தித்தாள்களில் வரும் குற்றங்களையும் பின்புலமாகக் கொண்டு திரைக்கதையைப் படைத்து, பரபரப்பை கூட்டி வெற்றி பெறுபவர் ஹச் வினோத்.

அஜித்தின் துணிவின் வெற்றிக்குப் பின் ஒரு வருட காலமாக உலக நாயகன் கமலை நம்பி, படம் இயக்குவேன் என்று ஏமாந்துதான் போனார் இந்த இயக்குனர்.

அதன் பின் தனுஷின் கூட்டணியில் சேர இருந்தபோது, விஜய் 69 காண வாய்ப்பு வர, தளபதியின் கடைசி படத்தில் இணைந்து தடம் பதிக்க போகிறார் இந்த தன்மான சிங்கம்.

வெங்கட் பிரபு உடனான கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தளபதி, ஜூன் மாதத்திற்கு பின் விஜய் 69 இல் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி தனது அரசியல் வரவை அறிவித்துள்ளதால், 2026 இல் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கும் நோக்கத்தில் 2025 க்கு பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளாராம்.

2025 டிசம்பருக்குள் முடிக்கப்படும் விஜய் 69  படப்பிடிப்பு

அதனால் 2025 டிசம்பர் மாதத்திற்குள் விஜய் 69 படத்தை முடிக்க வேண்டும் எனவும், அரசியலில் கால் பதித்துள்ளதால்,

மக்களுக்கு சீர்திருத்த கருத்துகளையும் விழிப்புணர்வையும்  ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும்  இயக்குனருக்கு கட்டளை இட்டு உள்ளாராம்.

விஜய்யை போலவே எம்ஜிஆர் பீக்கில் இருந்த போது அரசியலில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி தமிழக முதல்வராக பல வருடங்கள் பணியாற்றினார்.

அதுமட்டுமின்றி எம்ஜிஆர், அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே சினிமாவிலும் நடித்து மக்களுக்கு தனது கட்சியை பற்றியும்,

தன்னைப் பற்றியும் பலவித நேர்மறையான கருத்துக்களை கூறிக் கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் சீர்திருத்தங்களை செய்து வந்தார்.

தற்போது தளபதியும் எம்ஜிஆரை போலவே தனது படத்தை அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி மக்களிடையே நெருங்க உள்ளார்.

தளபதி விஜய் சொல்லிய கண்டிஷன் எல்லாத்துக்கும் ஓகே சொல்லிவிட்டார் ஹச் வினோத். இதனால் மகிழ்ந்த தளபதி விஜய் 69 படத்திற்கான எல்லா செட்யூலுக்கும் ஓகே சொல்லி விட்டாராம். 

இவர் போற வேகத்தை பார்த்தா 2025 பொங்கலுக்கு விஜய் 69 ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்