அனிருத்தை ஓரம்கட்ட வரும் ஜிவி பிரகாஷ்.. அடுத்தடுத்த படவாய்ப்பால் எடுத்த முக்கிய முடிவு

இசையமைப்பாளர் அனிருத் தற்போது தனக்கு வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம். அதாவது ஜெயிலர், லியோ, இந்தியன் 2, ஏகே 62 இது தவிர இன்னும் சில படங்கள் அனிருத் கைவசம் இருக்கிறது. அதுமட்டுமின்றி வெளிநாடுகள் சென்று இசை நிகழ்ச்சியையும் அனிருத் செய்து வருகிறாராம்.

சொல்லப்போனால் அஜித்தின் ஏகே 62 படத்தில் முதலில் இசையமைக்க அனிருத் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இப்போது நேரம் இல்லை என்பதால் இந்த படத்தை என்னால் பண்ண முடியாது என கூறியுள்ளார். ஆனால் ஏகே 62 படக்குழு தரப்பிலிருந்து அனிருத்துக்கு கோரிக்கை வைத்ததால் வேறு வழியில்லாமல் இந்த படத்தில் இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.

Also Read : லியோ படத்தில் இத்தனை பாடல்களா?. அனிருத், லோகேஷ் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்

ஆனால் தற்போது அனிருத்தை ஓரம்கட்ட ஜிவி பிரகாஷ் வர உள்ளார். அதாவது இவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியதிலிருந்து படத்தில் இசையமைப்பதை பிரகாஷ் குறைத்துக் கொண்டார். இதனால் நடுவில் வந்த அனிருத் உச்சத்திற்கு வந்து விட்டார்.

அதுமட்டுமின்றி முக்கிய இசையமைப்பாளர் என்ற பெயரையும் அனிருத் பெற்றிருந்தார். இந்த சூழலில் ஜிவி பிரகாஷ் நடித்த படங்கள் எதுவும் சமீப காலமாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆகையால் இனி அதிக அளவு இசையில் கவனம் செலுத்தலாம் என ஜிவி பிரகாஷ் முடிவெடுத்துள்ளாராம்.

Also Read : அனிருத்க்கே டஃப் கொடுக்க வரும் அடுத்த வாரிசு.. வெளிநாட்டிலிருந்து இறங்கிய 19 வயது இளம் இசையமைப்பாளர்

ஆகையால் இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் கணிசமாக ஜிவி பிரகாஷிடம் செல்கிறது. இதற்கு முதல் படியாக சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறாராம்.

இப்போதே அடுத்தடுத்த நடிகர்களும் ஜிவி பிரகாஷ் புக் செய்வதில் மும்மரம் காட்டி வருகிறார்கள். இதனால் அனிருத்தை தற்போது ஓரம் கட்டி விட்டு அவரது இடத்திற்கு சீக்கிரம் ஜிவி பிரகாஷ் வந்துவிடுவார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இந்த விஷயம் ஜிவி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Also Read : சிவகார்த்திகேயனை பாதியிலேயே கழட்டிவிட்ட அனிருத்.. பின்னால் இருக்கும் காரணம்