Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் இத்தனை நாளாக விறுவிறுப்பாக இருந்தாலும் தற்போது மிக சுவாரசியத்துடன் புதுப்புது கதாபாத்திரங்களை கொண்டு வந்து பார்ப்பவர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தம், எக்ஸ் காதலியான ஈஸ்வரியை நினைத்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் இவருடைய இன்னொரு அழகான பக்கம் பொண்டாட்டி, குழந்தையுடன் சந்தோசமாக இருக்கிறார் என்பதை காட்டிவிட்டார். அந்த வகையில் இவர்களை சந்திப்பதற்காக ஜீவானந்தம் வருகிறார். இதை அறிந்து கொண்டு குணசேகரன் ஏற்பாடு பண்ண சைக்கோ மற்றும் கதிர், ஜீவானந்தத்தை காலி பண்ண வேண்டும் என்று இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் வந்துவிட்டார் நான் அவருடைய வீட்டிற்கு போகும் வழியை காட்டிவிடுகிறேன் என்று ஜனனியை அந்த ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவர் அழைத்துக் கொண்டு வருகிறார். இப்படி மூன்று பேரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான விஷயங்கள் இங்கே நடக்கப் போகிறது. அதாவது ஜீவானந்தத்தை கொலை செய்ய முயற்சிக்கும் கதிர் மற்றும் சைக்கோவிடமிருந்து காப்பாற்ற போவது ஜனனியாக இருக்கலாம்.
இல்லையென்றால் ஜீவானந்திடமும், அங்கு இருக்க மக்களிடமும் சிக்கிக்கொண்ட கதிரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஜனனி இறங்குவதற்கு வாய்ப்புகள் நடக்கலாம். இதில் எது நடந்தாலும் ஒரு நல்ல விஷயம் ஆரம்பமாக போகிறது. அதாவது கதிர் இக்கட்டான சூழலில் மாட்டிய போது ஜனனி இவரை காப்பாற்றும்படி இருந்தால், குணசேகரனிடம் நந்தினி விட்ட சவால்படி கதிர் திருந்துவதற்கு வாய்ப்புகள் அமையும்.
Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!
ஒருவேளை ஜீவானந்தம் மாட்டிக் கொண்டால் ஜனனி இவரை காப்பாற்றி எல்லா உண்மையும் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆக மொத்தத்தில் இங்கே திருப்புமுனையாக ஒரு விஷயம் நடக்கப் போகிறது. அடுத்தபடியாக சக்திக்கு பணிவிடை பார்த்து வரும் ஈஸ்வரியை வழக்கம் போல் குணசேகரன் நக்கல் அடித்து பேசுகிறார்.
அப்பொழுது நந்தினி நீங்கதான் மனுஷ ஜென்மமே இல்லையே என்று குணசேகரனை வார்த்தையால் தாக்கி பேசுகிறார். ஆனாலும் எதற்கும் அசராத குணசேகரன் இவருடைய பழியை தீர்க்கும் படி ஜீவானந்தத்தின் கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிருகமாக வேட்டையாட நினைக்கிறார். இவருடைய உண்மையான நோக்கத்தை கதிர் புரிந்து கொண்டு முழுக்க முழுக்க நந்தினி பக்கம் இருந்தால் குணசேகரனின் நிலைமை இனி அதோ கெதி தான்.
Also read: நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்