ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பெத்த மகளை பலி கொடுத்து குளிர் காய நினைக்கும் குணசேகரன்.. தர்ஷினியை வச்சு ஓவர் அலம்பல் பண்ணும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன், செய்த தவறால் தற்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அதே நேரத்தில் தர்ஷினியை கடத்தியது நாம்தான் என்று யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஒவ்வொன்றையும் பக்கவாக பிளான் பண்ணி செய்து இருக்கிறார். இதெல்லாம் தெரியாமல் ஜீவானந்தம், தர்ஷினியை காப்பாற்ற போய் தற்போது மாட்டிக் கொண்டார்.

அதற்கேற்ற மாதிரி எல்லா எவிடன்ஸ்மே ஜீவானந்தத்திற்கு எதிராக இருக்கிறது. ஆனால் குணசேகரன் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமே இல்லை என்று ஆணவத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் ஓவராக குதித்து வருகிறார். இதனை தொடர்ந்து தர்ஷினியால் மாட்டிட கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த பயத்தையும் மனதிற்குள் வைத்து மறைத்து வருகிறார்.

மேலும் தர்ஷினியும் ஜீவானந்தமும் போலீஸ் கையில் கிடைத்துவிட்டால் நம்முடைய அனைவரது கதையும் அம்பலாகிவிடும் என்பதால் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளி ஆட்களுக்கு போன் பண்ணி தர்ஷினி மற்றும் ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் போட்டுவிட்டார். அதன்படி வெளியே இருக்கும் ரவுடி ஜீவானந்தத்தையும் தர்ஷினியையும் தேடி அலைகிறார்.

Also read: பெத்த மகனின் இமேஜை டேமேஜ் பண்ணிய விஜயா.. கணவருக்காக மாமியாருக்கு சவுக்கடி கொடுத்த சுருதி

அதே நேரத்தில் தர்ஷினியை எப்படியாவது போலீஸிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று நினைத்த ஜீவானந்தத்தை பார்த்ததும் ஷூட்டிங் பண்ணிவிடலாம் என்று ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு போலீசார் தேடி அலைகிறார்கள். இவர்கள் அனைவரையும் சமாளித்து எப்படியாவது தர்ஷினியை கூட்டிப் போக வேண்டும் என்று ஜீவானந்தம் பிளான் பண்ணுகிறார்.

இதற்கு ஆரம்பத்திலேயே தர்ஷினியை பார்த்ததும் போலீஸ் இடம் போன் பண்ணி சொல்லி இருக்கலாம். அல்லது இவருக்கு தெரிந்த அதிகாரிகள் அல்லது சாருபாலா மூலம் ஏதாவது ஐடியா கேட்டிருக்கலாம். அதெல்லாம் விட்டுவிட்டு தர்ஷினியை தன்னுடன் வைத்துக் கொண்டு ஹீரோயிசம் காட்டும் அளவிற்கு ஓவராக அலப்பறை பண்ணுவது பார்க்கவே எரிச்சல் அடைய வைக்கிறது.

இதனைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டிற்கு வந்து அவர் கையில் இருக்கும் வீடியோவை அனைவரிடமும் காட்டிவிட்டு ஜீவானந்தம் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்கிற மாதிரி ஓவர் நல்லவராக பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் ஜனனியையும் இதில் குற்றம் சொல்லி ஒட்டுமொத்த பேரின் வாயை அடைக்க முயற்சி பண்ணுகிறார். இதுல நந்தினி ரேணுகா வேற எதிரெதிரே நின்னு சின்ன பிள்ளை மாதிரி அலப்பறையை கூட்டுகிறார்கள்.

Also read: மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா

- Advertisement -

Trending News