ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சொத்துக்காக செத்து செத்து விளையாடும் குணசேகரன்.. நந்தினி எடுக்க போகும் புது அவதாரம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் பெருசாக நினைக்கும் சொத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு போவதால் தற்போது படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். ஆனால் இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவர் திருவிளையாடலில் இது ஒரு நாடகமாக கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.

சொத்துக்காக எந்த எல்லைக்கும் போகவும் தயங்க மாட்டார். இவருடைய பரிதாப நிலையால் அந்த வீட்டில் பெண்கள் ஜீவானந்தத்திடம் எப்படியாவது போராடி சொத்தை மீட்டெடுத்து கொடுப்பார்கள் என்ற நப்பாசையில் குணசேகரன் செத்து செத்து விளையாடுகிறார். ஆனாலும் இவ்வளோ விஷயங்கள் நடந்தும் இவருடைய குசும்புத்தனமான பேச்சு மட்டும் குறையவே இல்லை.

Also read: டிஆர்பி இல்லாததால் பிரபல சீரியலை ஊத்தி முடிய சன் டிவி.. எதிர்நீச்சல் போல புத்தம் புது என்ட்ரி

ஒன்னு மட்டும் நல்லாவே புரிகிறது இந்த குணசேகரன் கேரக்டர் மாறவே போறதில்லை. அதனால் கடைசி வரை இந்த குணசேகரன் ஆம்பளைங்க மத்தியில் தான் இருக்கணும் என்று இவருடைய தலையெழுத்தாகவே இருக்கப் போகிறது. கட்டின புருஷன் இந்த நிலைமையில் இருக்கிறதை பார்த்தும் கொஞ்சம் கூட கலங்காமல் இருகிறார் ஈஸ்வரி. ஆனால் இதற்கும் காரணம் குணசேகரன் தான்.

ஏனென்றால் அந்த அளவிற்கு படாத பாடு படுத்திருக்கிறார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு சந்தோசம், அது போல் குணசேகரனுக்கும் ஜீவானந்தம் வந்த பிரச்சனையால், அந்த வீட்டில் உள்ள பெண்கள் இனிமேல் அவர்களுக்கான சுதந்திரத்தை தேடி கொள்ளலாம். அதற்கு முதல் கட்டமாக நந்தினி புது அவதாரம் எடுக்கப் போகிறார். எப்படியோ ஈஸ்வரி வீட்டில் ஊமையாக இருந்தாலும், கல்லூரியில் சிறப்பு பேச்சாளராக வாழ்க்கையை நடத்தி மாத வருமானத்திற்கு வழி வகுத்து விட்டார்.

Also read: லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக போகும் எதிர்நீச்சல்.. நேருக்கு நேராக மோதும் ஜீவானந்தம் குணசேகரன்

அந்த வகையில் தற்போது நந்தினியும் சமையல் கலையில் தேறி வந்துவிட்டார் என்பதால் ஜனனி இவருக்கு ஒரு பாதையை ஆரம்பித்து கொடுக்கப் போகிறார். அதற்காக ஜனனி, பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சமையல் ஆர்டர் பிடித்து முன்னுக்கு வந்தது போல், நந்தினியும் சமைச்சு கொடுத்து வாழ்க்கையில் ஜெயிக்கப் போகிறார்.

அடுத்தபடியாக ஜனனி எதிர்பார்த்த பேங்க் லோன் அவருக்கு அப்ரூவல் ஆகிவிட்டது. இதை வைத்து புது பிசினஸ் ஆரம்பித்து விடுவார். பொண்டாட்டிக்கு டிரைவர் வேலை பார்த்துட்டு வரும் சக்தியும் எப்படியும் கரை சேர்ந்து விடுவார். அடுத்ததாக ரேணுகாவிற்கும் கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும். கடைசியில் பெண்கள் அவர்கள் நினைத்தபடி சுதந்திரமாக வாழ போகிறார்கள்.

Also read: குணசேகரனின் அஸ்திவாரத்தை உடைக்கும் சில்வண்டு.. பெண்களின் அடிமைத்தனத்தை தோலுரிக்கும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News