அப்பத்தாவிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் குணசேகரன்.. கட்டின வேட்டியை கூட உருவிட்டு விடும் நேரம் வந்தாச்சு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் குணசேகரன் செய்கிற ஒவ்வொரு விஷயத்துக்கும் அதிரடியான தரமான செயலை பதிலடியாக கொடுத்து வருகிறார் அப்பத்தா. இதில் 20 வருஷமாக வாழ்ந்த மனைவியை விவாகரத்து பண்ண வேண்டும் என்று முடிவுடன் நடு வீட்டில் ஆட்களை கூட்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார் குணசேகரன்.

அந்த நேரத்தில் ஜெயிலர் படத்தின் பிஜிஎம் என்ட்ரியுடன் மாஸாக வீட்டுக்குள் நுழைந்தார் அப்பத்தா. அவர் வரும்போது இரண்டு போலீஸ் பாதுகாப்புடன் சும்மா கெத்தாக வந்து குணசேகரனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு செய்திருக்கிறார். அதாவது குணசேகரனிடம் இருக்கும் சொத்து அனைத்திலும் 40% உரிமை அப்பத்தாவிற்கு இருக்கிறது.

Also read: 50 வயதில் 5 பொண்டாட்டியுடன் வாழ நினைக்கும் குணசேகரன்.. பண திமிரில் அட்டூழியம் பண்ணும் கொடுமைக்காரன்

அதனால் இந்த வீட்டில் இருக்கும் உரிமை அப்பத்தாவிற்கு இருக்கிறது. மேலும் இவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்து வரக்கூடாது. அப்படி ஏதாவது சின்ன காயங்கள் ஏற்பட்டால் கூட குணசேகரன் தான் பொறுப்பு என்று போலீசார் இவரை மிரட்டி விட்டார்கள். இதனால் ஒன்னும் பண்ண முடியாமல் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் படி குணசேகரன் நிலைமை ஆகிவிட்டது.

அத்துடன் எதற்கெடுத்தாலும் எகிறி கொண்டு வரும் கதிரும் டம்மி ஆகிவிட்டார். இனி அப்பத்தா இந்த வீட்டில் எடுக்கும் முடிவுதான் தீர்மானமாக இருக்கப் போகிறது. அதனால் குணசேகரன், ஈஸ்வரியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று மனதார கூட நினைக்க முடியாது. அத்துடன் அப்பத்தா, சக்தி மற்றும் ஜனனியும் இந்த வீட்டில் என் கூட தான் இருப்பார்கள் என்று சக்க போடு போட்டுவிட்டார்.

Also read: கடவுள் இருந்தா எதுக்கு நாட்டுல இவ்ளோ கெட்டது நடக்குது.. கமல் போல் நாத்திகம் பேசும் எதிர்நீச்சல் குணசேகரன்

அதற்கு குணசேகரன் அப்ப நாங்க வேணா வெளியே போகட்டுமா என்று கேட்க, அதற்கும் அப்பத்தா அது உன்னுடைய இஷ்டம் என்று சொல்லி குணசேகரன் மூஞ்சில் கறியை பூசி விட்டார். இனி என்ன குணசேகரன் மற்றும் தம்பிகள் ஜனனி சக்தி இருந்த குடோன்ல போய் அடைய வேண்டியது தான்.

ஆனாலும் என்னதான் நான் கீழ விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்ற கர்வத்துடன் தான் சுற்றித் திரியப்போகிறார் குணசேகரன். இனி ஒவ்வொரு நாளும் குணசேகரன் அப்பட்டமாக அந்த வீட்டில் இருக்கும் மருமகளிடம் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து அப்பத்தாவின் ஆட்டம் சும்மா தீ பொறியாக பறக்கப்போகிறது. இனி குணசேகரன் ஒவ்வொரு நாளும் அவமானப்படுவதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: கள்ள காதலனை பார்த்துட்டு வரியா ஈஸ்வரி.? செல்லா காசாக குணசேகரனை கிழித்து தொங்க விட்ட சம்பவம்

- Advertisement -