ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கள்ள காதலனை பார்த்துட்டு வரியா ஈஸ்வரி.? செல்லா காசாக குணசேகரனை கிழித்து தொங்க விட்ட சம்பவம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தகதகவென நெருப்பு போல் குணசேகரனை வார்த்தையால் சுட்டெரித்து விட்டார் ஈஸ்வரி. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அந்த வகையில் மானத்திற்கு கலங்கம் வந்தால் எந்த எல்லைக்கும் போவேன் என்று புருஷனுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார். அதாவது கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி அப்பா தேவையில்லாமல் உளறியதிலும் ஒரு நன்மை பிறந்திருக்கிறது.

ஜீவானந்தம் ஈஸ்வரியை பொண்ணு பார்க்க வந்தார் என்று விஷயத்தை குணசேகரன் இடம் சொல்லிவிட்டார். சும்மாவே ஆடுவாரு இதுல வேப்பிலை வேற கைல கொடுத்தாச்சு சொல்லவா செய்யணும், வாசலிலேயே நின்றபடி ஈஸ்வரியை வார்த்தையாலே தாக்கி விட்டார். ஆனால் என் மேல் எந்த தப்பும் இல்லை நான் எதற்கு பயந்து இருக்க வேண்டும் என்று துணிச்சலுடன் குணசேகரன் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலடி கொடுத்தார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

அடுத்ததாக ஈஸ்வரி மேல் சந்தேகப்பட்டு ஜீவானந்தத்தை சேர்த்து வைத்து பேசியதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளையும் சாட்சிக்கு இழுத்து கீழ்த்தனமாக நடந்து கொண்டார். இவர் என்னதான் வார்த்தையால் தாக்கினாலும் அதற்கு தக்க பதிலடி கொடுத்துட்டு வந்தார் ஈஸ்வரி. கடைசியில் உன் கள்ளக்காதலனை பார்த்துட்டு இங்க வந்து இவ்வளவு பேசுறியா என்று தகாத வார்த்தையால் ஈஸ்வரியை தாக்குகிறார்.

அத்துடன் ஜீவானந்தம் உன்னை பொண்ணு கேட்டு உங்க அப்பா ஓகே சொல்லி இருந்தா நீ அவரை கல்யாணம் பண்ணி இருப்பியா என்று கேட்டார். அதற்கு ஈஸ்வரி முன்ன பின்ன தெரியாத உங்களையே நான் கல்யாணம் செய்திருக்கும்போது. அவரை நான் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன். எனக்குள் அபிப்பிராயம் அவரைப் பற்றி வந்திருக்கிறது.

Also read: குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

அந்த வகையில் எங்க அப்பா ஓகே சொல்லி இருந்தா நான் ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன் என்று குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசி விட்டார் ஈஸ்வரி. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத குணசேகரன் அங்கு இருக்கும் அனைவரது முன்னாடியும் செல்லாக்காசாக அவமானப்பட்டு விட்டார்.

என்ன நடந்தாலும் துணிச்சலுடன் போராட வேண்டும் என்று தைரியமாக இருக்கிறார் ஈஸ்வரி. இனி குணசேகரனின் ஜம்பம் இதுவும் பலிக்கப் போவதில்லை. நான்கு மருமகள்களின் ஆட்டம் குணசேகரனை எந்த அளவிற்கு அடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய குணசேகரன்

- Advertisement -

Trending News