வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

50 வயதில் 5 பொண்டாட்டியுடன் வாழ நினைக்கும் குணசேகரன்.. பண திமிரில் அட்டூழியம் பண்ணும் கொடுமைக்காரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் குணசேகரனின் அட்டூழியம் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஈஸ்வரியின் அப்பா யதார்த்தமாக ஜீவானந்தத்தை பற்றிய விஷயங்களை உளறி விட்டார். இந்த விஷயத்தை வைத்து 20 வருஷமாக வாழ்ந்த மனைவி என்று கூட பாராமல் ஈஸ்வரியை படாதபாடு படுத்தி வருகிறார் குணசேகரன்.

அதாவது ஊரில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் ஈஸ்வரியின் அப்பா முன்னிலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்லை. எங்களை பிரித்து விடுங்கள் என்று கையெழுத்தை வாங்க சொல்கிறார். இதற்கு நியாயம் கேட்ட ஈஸ்வரின் அப்பாவை கதிர் வழக்கம்போல் அவருடைய மூர்க்கத்தனமான பேச்சால் அதட்டி விடுகிறார்.

Also read: கடவுள் இருந்தா எதுக்கு நாட்டுல இவ்ளோ கெட்டது நடக்குது.. கமல் போல் நாத்திகம் பேசும் எதிர்நீச்சல் குணசேகரன்

அடுத்ததாக ஈஸ்வரி எத்தனை வருஷமா வீட்டுக்குள்ள வேலைக்காரி மாதிரி அடைச்சு வச்சுட்டு, இப்ப வீட்டை விட்டு வெளியில் போக சொன்னா எப்படி? இது கொஞ்சம் கூட சரியே இல்ல என்று சொல்கிறார். அத்துடன் நான் படிச்ச படிப்புக்கு இத்தனை வருஷம் வெளியில் வேலை பார்த்திருந்தால் என்னுடைய அந்தஸ்து எந்த அளவுக்கு இருந்திருக்கும். அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார்.

அதற்கு குணசேகரன் நீ ஒன்னும் சும்மா போக வேண்டாம் உனக்கு தேவையான பணத்தை தருகிறேன். வாங்கிட்டு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நீ ஆசைப்பட்ட மாதிரி சுதந்திரமாக உன் வாழ்க்கையை ஆரம்பிச்சுக்கோ என்று சொல்கிறார். உடனே குணசேகரனின் மாமா ஒருவர் உன்ன பற்றியும் உன் வாழ்க்கையை பற்றியும் யோசித்தாயா என்று கேட்கிறார்.

Also read: சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய குணசேகரன்

அதற்கு குணசேகரன் பண திமிரில் எனக்கு என்ன, 50 வயசிலையும் அஞ்சு பொண்டாட்டியுடன் சந்தோஷமா வாழ முடியும் என்று தெனாவட்டாக பதில் சொல்கிறார். நீ என்ன செஞ்சாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்ற அளவுக்கு அப்பத்தாவின் தரமான செயல் இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அந்த வீட்டில் எதுக்காக, ஏன் இருக்கும் என்று தெரியாமல் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன பையன் மாதிரி கரிகாலன் முழித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய நிலைமை ரெண்டு கட்டமாக தான் இருக்கிறது. அத்துடன் குணசேகரன் செய்யும் எல்லா விஷயத்துக்கும் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் செஞ்சாதான் குணசேகரன் மாமா தன்னுடைய ஹனிமூன்-க்கு ஏற்பாடு பண்ணுவார் என்ற அல்ப சந்தோஷத்தில் மட்டமான மருமகனாக இருக்கிறார். இவர் ஆசைப்பட்ட மாதிரி நடக்கிறதா இல்லையென்றால் ஆதிரை கரிகாலனை அடிச்சு விரட்ட போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: சொத்தும், பொண்டாட்டியும் இல்லாமல் நடுத்தெருவில் திண்டாட போகும் குணசேகரன்.. எல்லாத்துக்கும் ஆப்பு வைத்த ஜீவானந்தம்

- Advertisement -

Trending News