புதன்கிழமை, நவம்பர் 13, 2024

குணசேகரனை முட்டாளாக்கிய அப்பத்தா.. ஜீவானந்தத்தின் குடும்பத்தை சுக்குநூறாக நொறுக்கிய கதிர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் எந்நேரமும் சுவாரசியமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. முக்கியமாக இன்று வருகிற எபிசோடு ஒரு ஆக்சன் திரில்லர் மூவியாக இருக்கப் போவது. அதாவது குணசேகரனுக்கு இருக்கிற எல்லா கோபத்தையும் மொத்தமாக அப்பத்தாவிடம் காட்டி தாறுமாறாக வாய்க்கு வந்தபடி மரியாதை இல்லாமல் பேசுகிறார்.

அடுத்ததாக ஆடிட்டர், வக்கீல் இவர்களை கூப்பிட்டு அப்பத்தவிடம் என்ன கேட்கணுமோ கேட்டு சொத்தை கைப்பற்ற பாருங்கள் என்று கூறுகிறார். இப்படி தொடர்ந்து அப்பத்தாவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆனால் அப்பத்தா எதுவுமே சொல்லாமல் இருக்கும் பொழுது பழைய நினைவுகள் எல்லாம் மறந்துட்டாங்களா என்கிற மாதிரி இருந்தது. ஆனால் திடீரென்று அப்பத்தா வாய் திறந்து பேசி ஜீவானந்தம் என்னுடைய ஆளு தான் என்று சொல்கிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

இதை கேட்டதும் குணசேகரன் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். ஆக மொத்தத்தில் ஜீவானந்தம் செய்தது எல்லாம் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும், அப்பத்தாவிற்காகவும் தான் என்று நன்றாகவே தெரிகிறது. இது தெரியாமல் அவரை காலி பண்ண வேண்டும் என்று கதிர் அங்கே அவருடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார்.

அதாவது கதிர் மற்றும் வளவன் கூட்டம் மொத்தமும் ஜீவானந்தம் வீட்டிற்கு போய்விட்டார்கள். அதே நேரத்தில் அங்கே பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு இவருடைய மகள் வெளியே தூக்கி போடுகிறார். அந்த நேரத்தில் இந்த கும்பல் ஜீவானந்தத்தை தாக்க முயற்சி செய்கிறார்கள். பாதுகாப்புக்காக ஜீவானந்தம் தடுக்கும் நேரத்தில் வளவன் துப்பாக்கியை வைத்து சுட்டு விடுகிறார்.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

ஆனால் இதற்கு யார் பலியானார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. கண்டிப்பாக ஜீவானந்தத்திற்கு எதுவும் ஆகாது. அதற்கு பதிலாக இவருடைய மனைவி கயல்விழி குறுக்கே போய் ஜீவானந்தத்தை காப்பாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தத்திற்கும் ஏதாவது அடி பட்டிருக்கும்.

இதை நேரில் பார்த்த ஜனனி, ஜீவானந்தத்தை காப்பாற்ற முயற்சி எடுக்கிறார். அதுவரை அந்த குழந்தை இவருடைய அரவணைப்பில் இருக்கும். இதற்கிடையில் இந்த கொலைகார கும்பல் உள்ளே நுழைந்தது வேறு யாருக்கும் தெரியாது. ஜனனி வந்ததை மட்டும் தான் ஊரில் இருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த பிரச்சனை அனைத்தும் ஜனனி மேலே திரும்புவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதில் கதிர் தேவையில்லாமல் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

- Advertisement -spot_img

Trending News