வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பதட்டத்திலும் இந்த 5 காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குணசேகரன்.. விட்டா ட்ரோனை வேட்டிக்குள்ள விட்டுருவாங்க

Gunasekaran: குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சீரியலை விடாமல் ஒவ்வொரு நாளும் ரசித்துப் பார்க்கிறோம் என்றால் அது சன் டிவியில் உள்ள எதிர்நீச்சல் நாடகம் தான். இந்த நாடகத்தில் என்னதான் கதைகளும் வசனங்களும் தூக்கலாக இருந்தாலும் இதற்கு உயிர் ஊட்டும் விதமாக இருப்பது குணசேகரனின் கேரக்டர் தான்.

இவருக்காக தான் இந்த சீரியலை நாங்கள் பார்த்து வருகிறோம் என்று கண் இமைக்காமல் ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு பார்த்துவிட்டு தூங்கப் போகிறார்கள். அப்படிப்பட்ட குணசேகரனின் கேரக்டர் வில்லத்தனமாக இருந்தாலும், அதில் நக்கல் கலந்த காமெடியும், நையாண்டியும் கூடவே பிறந்தது போல் எதார்த்தமாக கொடுப்பார். அப்படி வயிறு குலுங்க சிரிக்க வைத்த குணசேகரனின் ஐந்து காமெடிகளை பற்றி பார்க்கலாம்.

Also read: குணசேகரன் மரணத்தை முன்பே கணித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இந்த காட்சியை கவனித்தீர்களா.?

அதில் சக்திக்கும், ஜனனிக்கும் கல்யாணம் ஆகும் போது ட்ரோன் மூலம் வீடியோ எடுப்பார்கள், அதைப் பார்த்துட்டு கடுப்பான குணசேகரன் விட்டா ட்ரோனை வேட்டிக்குள்ளேயே விட்டுருவாங்க போல என்று எதார்த்தமாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்து தக்லைப் மன்னனாக இருந்திருக்கிறார்.

அடுத்ததாக ஜனனியை மணமேடைக்கு அவர்களுடைய நண்பர்கள் கூட்டி வரும்போது ஆடலும் பாடலும் என்ற கான்செப்டில் ஆடிட்டே கூட்டிட்டு வருவார்கள். அப்பொழுது குணசேகரன் ரொம்பவே டென்ஷன் ஆகி ஏன் இப்படி ஆடுறீங்க என்று கேட்டிருப்பார். அதற்கு அவர்கள் இதுதான் அங்கிள் ட்ரெண்டிங் என்று சொல்ல, உடனே குணசேகரன் ஆனா ஒண்ணா ட்ரெண்டு ட்ரோண்டு-ன்னு சொல்லிடுவீங்களே என்று நக்கல் அடித்து இருப்பார்.

Also read: சும்மாவே எச்சி கைல காக்கா ஓட்டுவீங்க.. ஜனனியை பழிவாங்க குணசேகரன் செய்யும் மட்டமான வேலை

அடுத்ததாக வீட்டுக்குள்ளேயே கதிர் தண்ணி அடிச்சிட்டு இருப்பாரு, இதை பார்த்த இவருடைய அம்மா சாமி இருக்க வீட்ல இதெல்லாம் பண்ணலாமா என்று குணசேகரனிடம் கேட்பார். உடனே அவர் சாமி அது பாட்டுக்கு ரூமுக்குள்ள இருக்கு, இவன் ஒரு ஓரமா குடிச்சிட்டு போறான் அதுக்கு என்னம்மா என்று பதிலடி கொடுத்திருப்பார்.

இதனைஅடுத்து வீட்டு வேலைக்காரனை பார்த்து யாருடா நீ புதுசா இருக்கு என்று கேட்பார். அதற்கு அவர் நான் தான் ராணியோட புருஷன் என்று சொல்லி இருப்பார். உடனே குணசேகரன் எந்த நாட்டு ராணியோட புருஷன் என்று நக்கலாக பேசி இருப்பார். அடுத்ததாக ஆதிரை கல்யாணத்தை ஒட்டி கதிரை யார் யாருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்ற லிஸ்ட்டை ரெடி பண்ண சொல்லி இருப்பார் குணசேகரன். அடுத்த நிமிஷமே உன்னுடைய லிஸ்ட்ல எல்லாமே பொண்ணுங்களா தானே இருக்கும் என்று தக்லைப் கொடுத்திருப்பார்.

Also read: 40% சொத்துக்கு அடி போட்டு வரும் பெருசு முதல் சிறுசு வரை.. குணசேகரன் போல் ஏமாந்து நிற்கும் மருமகள்கள்

- Advertisement -

Trending News