India | இந்தியா
சும்மாவே எச்சி கைல காக்கா ஓட்டுவீங்க.. ஜனனியை பழிவாங்க குணசேகரன் செய்யும் மட்டமான வேலை
எவ்வளவு பட்டும் திருந்தாமல் மறுபடியும் குணசேகரன் பழிவாங்கும் எண்ணத்தில் கொலை வெறியுடன் சுற்றி வருகிறார்.

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரின் ஒட்டுமொத்த ஆணவத்தையும் அடக்கி ஒடுக்கி வைத்த அப்பத்தாவின் தரமான செயல் அதிரடியாக இருக்கிறது. அத்துடன் வீட்டில் அடிமையாக இருந்த மருமகள்கள் ஒவ்வொருவரும் சொந்த காலில் முன்னேறுவதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் ஜனனிக்கு புது பிசினஸை தொடங்குவதற்கு பேங்க் லோன் கிடைத்துவிட்டது.
இந்த சந்தோஷத்தை சக்தி, ஜனனிடம் சொல்லி அடுத்த கட்ட முயற்சியில் இறங்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே குணசேகரின் அம்மா அவருக்கு சொந்தமான நகையே சக்தியிடம் கொடுத்து இது உன்னுடைய தொழிலுக்கு நான் கொடுக்கும் மூலதனம். இதை வைத்து நீங்கள் இருவரும் முன்னேற வேண்டும் என்று அவர் ஆசீர்வாதம் கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் தற்போது பிசினஸ் தொடங்க போகிறார்கள். இந்த விஷயத்தை சக்தி, அம்மாவிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கி நல்ல நேரத்தை பார்த்து சொல்லு என்று சொல்கிறார். உடனே விசாலாட்சியும் ரொம்பவே சந்தோஷத்துடன் நான் பார்த்து சொல்கிறேன் என்று சொல்ல, அதற்கு குணசேகரன் யார் வீட்டில் வந்து யாரு கடைய போடுவது என வம்பு இழுக்கிறார்.
இதற்கு இடையில் கரிகாலன் மற்றும் ஆதிரையின் ஹனிமூன் விஷயத்தை ஆரம்பிக்கிறார் ஞானம். அப்பொழுது இவர்களுக்கு கொடைக்கானல் போவதற்கு எல்லா ஏற்பாடும் செய்திருக்கிறேன் என்று கதிர் சொல்கிறார். அதற்கு கரிகாலன் கொடைக்கானலுக்கு பதிலாக வேறு எங்கேயாவது போட்டு இருக்கலாமே என்று சொல்கிறார். உடனே ஞானம் நீ லண்டனுக்கு போலாம் என்று பிளான் பண்ணி இருக்கியா என்று நக்கல் அடிக்கிறார்.
Also read: சொத்துக்காக காவு கொடுக்க போகும் குணசேகரன்.. வேட்டை நாயின் வேட்டை ஆரம்பம்
அதற்கு கரிகாலன், நீங்க அப்படியே அனுப்பி வச்சிட்டாலும் சும்மாவே எச்சி கைல காக்காவை கூட விரட்ட மாட்டீங்க என்று குத்தி காட்டி பேசுகிறார். அடுத்தபடியாக கதிர் மற்றும் வளவன் ஜீவானந்தத்தின் கதையை கொடைக்கானலில் முடிப்பதற்கு பிளான் பண்ணி இருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் அங்கே போய் சம்பவத்தை பண்ண போகிறார்கள்.
அதே நேரத்தில் ஆதிரை கரிகாலனும் போகிறார்கள். ஆக மொத்தத்தில் அங்கே ஏதோ ஒரு தரமான சம்பவம் நடக்கப் போகிறது. ஏற்கனவே ஜீவானந்தம் கொலவெறியுடன் தன் மனைவி கயல்விழியை கொன்றவரை பழிவாங்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார். இதில் தானாகவே மாட்டிக் கொள்ளப் போகிறார் கதிர் மற்றும் வளவன். இதற்கடுத்து அங்கே யாருக்கு என்ன நடக்க இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
