சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

40% சொத்துக்கு அடி போட்டு வரும் பெருசு முதல் சிறுசு வரை.. குணசேகரன் போல் ஏமாந்து நிற்கும் மருமகள்கள்

Ethirneechal Promo: வாழ்க்கையில் எதார்த்தமாக சந்திக்க கூடிய விஷயங்கள் அனைத்தும் ஒரு நாடகத்தின் மூலம் ஒளிபரப்பாகி வருகின்றது என்றால் அது சன் டிவியில் உள்ள எதிர்நீச்சல் சீரியல். அந்த வகையில் சொத்துக்காக ஒரு மனிதன் எந்த அளவிற்கு மாறுகிறார் என்பதற்கு உதாரணமாக குணசேகரனின் செயல்கள் இருக்கிறது.

அத்துடன் செண்டிமெண்டாக பேசி தம்பிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறார். அதில் தற்போது அப்பத்தாவின் 40% நமக்கு கிடைக்காது என்று தெரிந்த நிலையில் அவரை காலி பண்ண வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார் குணசேகரன்.

Also read:  சொத்துக்காக காவு கொடுக்க போகும் குணசேகரன்.. வேட்டை நாயின் வேட்டை ஆரம்பம்

அதே நேரத்தில் அண்ணன் என்ன பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும் என்று கண்மூடித்தனமாக இவருடைய தம்பிகளும் நம்புகிறார்கள். அதில் கதிர் ஒரு படி மேலே சென்று குணசேகரன் என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மையாக, வேட்டை நாய் போல் மாறிவிடுகிறார். அந்த வகையில் அப்பத்தாவின் கதையை முடிப்பதற்கு தயாராகி விட்டார் கதிர்.

இதற்கு இடையில் அப்பத்தா, கோமா ஸ்டேட் போன நிலையில் கதிர் மட்டுமே உண்மையான பாசத்துடன் பட்டு என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்படிப்பட்ட இவர் அண்ணன் சொன்னார் என்பதற்காக எமனாக மாறிவிட்டார். அடுத்ததாக அப்பத்தா மற்றும் மருமகள்கள் அனைவரும் ஒன்றாக கூடி பேசி வருகிறார்கள்.

Also read: 50 வயதில் 5 பொண்டாட்டியுடன் வாழ நினைக்கும் குணசேகரன்.. பண திமிரில் அட்டூழியம் பண்ணும் கொடுமைக்காரன்

இதில் குணசேகரனின் மகள் தர்ஷினி அப்பத்தாவிடம், எப்படியும் உங்கள் 40% சொத்து இங்கு இருக்கும் மருமகளிடம் தானே கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறார். இவர் கேட்கும் போதே தெரிகிறது அந்த சொத்தின் மீது ஒரு ஏக்கம் இருப்பது போல். அதற்கு அப்பத்தா என்னுடைய ஷேர் இவங்களுக்குத் தான் நான் கொடுப்பேன்னு உனக்கு யாரு சொன்னா என்று கேட்கிறார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத மருமகள்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தர்ஷினிக்கு ரொம்பவே ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஆக மொத்தத்தில் அப்பத்தாவின் 40% சொத்தின் மீது மருமகள்களும் கண் வைத்திருக்கிறார்கள் என்று புரிகிறது. இதனால் அவர்களுடைய முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிகிறது. இந்த 40% சொத்தை அப்பத்தா என்னதான் பண்ணப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய குணசேகரன்

- Advertisement -

Trending News