எமனுக்கே எமனாக வந்து நிற்கும் ஜீவானந்தம்.. பொட்டிபாம்பாக அடங்கும் ஜனனி குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜீவானந்தம் வந்ததற்குப் பிறகு தற்போது தான் குணசேகரன் மற்றும் ஜனனியை சந்திக்கும் தருணம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் சந்திப்பு அடி தடியில் ஆரம்பித்துவிட்டது.

சொத்து பறிபோனது என்று ஆடிட்டர் சொன்ன நிலையில் குணசேகரனுக்கு கையும் காலும் ஓடவில்லை. காரில் வரும்போது வாயை கொஞ்சம் கூட மூடாமல் புலம்பிக்கொண்டே வருகிறார். இதில் ஜனனிக்கு தான் ஏதாவது லிங்க் இருக்கும் என்று நினைத்து பேசுகிறார். இதே மாதிரி வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த ஜீவானந்தம் குணசேகரனுடைய ஆள் என்று நினைக்கிறார்கள்.

Also read: முல்லை மூலமாக கதிருக்கு தெரியவரும் உண்மை.. கிளைமேக்ஸ்க்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆக மொத்தத்தில் இவர்கள் இருவரின் கணிப்பு தவறாக போய்விட்டது. கோவத்தின் உச்ச கட்டத்தில் குணசேகரன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி புலம்ப ஆரம்பித்துவிட்டார். அடுத்து ஆபீஸ்க்கு போனா, அங்கே ஜீவானந்தம் ஆட்கள் தான் இருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளாத கதிர் வழக்கம்போல் துள்ளிக் கொண்டு எகிற ஆரம்பித்து விட்டார்.

ஆனால் கதிர் கொட்டத்தை அடக்கும் விதமாக ஃபர்கானா கொடுத்த அடி தான் நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஆனந்தம். யாராவது கதிரை அடிக்க மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய குறையே தீர்த்து விட்டார். அடுத்து ஜனனி வந்தபோது இவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அடுத்து ஃபர்கானாவிடம், ஜனனி பேசிய போது நீங்க தானே வீட்டுக்கு வந்து கைரேகை எடுத்துட்டு போனீங்க. இது சட்டப்படி நியாயமே இல்லை என்று சட்டம் பேசுகிறார்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

அதற்கு பொறுமையாக இருந்தால் நீங்கள் என்னுடைய தோழரே சந்திக்கலாம் என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து குணசேகரன் புரியாத நிலையில் நிற்கிறார். அடுத்து ஜனனி, மொபைலில் இருக்கும் ஜீவானந்தம் போட்டோவை காட்டி, இது உங்களுடைய ஆளு தானே என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் இந்த தாடி வச்ச பரதேசி யாருன்னு எனக்குத் தெரியாது என்று சொல்கிறார்.

உடனே ஃபர்கானா அவர்களை ஜீவானந்தத்தை சந்திக்க கூட்டிட்டு போகிறார். போகும் போது குணசேகரன் பெரிய ரவுடி மாதிரி கதிரிடம் நீ நாலு பேர அடி, ஞானம் நீ நாலு பேர அடி, நான் ரெண்டு பேர அடிக்கிறேன் என்று சொல்கிறார். அங்கே போய் மறுபடியும் சண்டை ஆரம்பித்த நிலையில் ஜீவானந்தம், குணசேகரனுக்கு எமனாக வந்து துப்பாக்கியோடு நிற்கிறார். குணசேகரன் என்னதான் துள்ளினாலும் இனி ஜீவானந்தத்திடம் பொட்டிப் பாம்பாக தான் அடங்க வேண்டும்.

Also read: மொத்தமாக குணசேகரனுக்கு சமாதி கட்டும் குடும்பம்.. நாளுக்கு நாள் கொஞ்சம் ஓவராக தான் போகுது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்