புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முல்லை மூலமாக கதிருக்கு தெரியவரும் உண்மை.. கிளைமேக்ஸ்க்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்பொழுது முடிவுக்கு வரப் போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா அண்ணன் தம்பிங்க பாசத்தை வச்சு உருட்டிட்டு வந்துட்டாங்க. இனிமேலும் போதும்டா சாமி என்று சொல்ற அளவுக்கு அரச்ச மாவையே அரைச்சிட்டு வராங்க.

அதற்கேற்ற மாதிரி முடியும் தருவாயில் ஒரு சென்டிமென்ட் வைத்து தாக்கினால் பினிஷிங் டச் அமோகமாக இருக்கும் என்று நினைத்து, இந்த குடும்பத்தில் இருக்கும் ஆணிவேருக்கு, அதாங்க தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த விஷயம் இப்பொழுது வரை தனத்திற்கும் மீனாக்கும் மட்டும் தான் தெரிந்திருந்தது.

Also read: கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அந்த வகையில் கொஞ்ச நாட்களாகவே இவர்களுடைய நடவடிக்கையில் ஏதோ வித்தியாசம் இருப்பதால் கதிருக்கு சந்தேகம் வந்து விடுகிறது. உடனே கதிர் அவருடைய அருமை பொண்டாட்டியான முல்லையிடம், என்ன விஷயம்னு மீனா அண்ணியிடம் சென்று மேட்டரை தெரிஞ்சிட்டு வா என்று அனுப்பி விடுகிறார்.

உடனே நம்ம முல்லையும் புருசன் பேச்சை தட்டாமல் மீனாவை தேடி அவருடைய அப்பா வீட்டுக்கு வருகிறார். அங்க போய்  மீனாவை பார்த்துட்டு ஏதோ ஒரு விஷயத்தை நீங்களும் தன அக்காவும் சேர்ந்து எங்களிடம் மறைக்கிறீர்கள் அது என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு மீனா சமாளிக்க முடியாமல், ஆமாம் தன அக்காவிற்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்.

Also read: ராதிகாவை நினைத்து புலம்பி அவஸ்தைப்படும் கோபி.. இனியாவை தூக்கிக் கொண்டாடும் குடும்பம்

இதை கேட்டதும் முல்லை அப்படியே ஷாக் ஆகி தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார். அதற்கு பிறகு என்ன இது நாள் வரை தனியாக அழுது  கொண்டிருந்த மீனா, இப்பொழுது முல்லையுடன் சேர்ந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு எல்லாம் எப்படி அழ வேண்டும் என்று சொல்லியா தரணும்.

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து கோவிலில் தனத்தை சந்திக்கிறார்கள். அங்கு போய் முல்லை தனத்திடம் சென்டிமெண்டாக பேசி அழுகிறார்கள். ஆனால் முல்லைக்கு தெரிந்ததால் கதிருக்கு கண்டிப்பா தெரிந்துவிடும். அப்படியாவது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து இந்த பிரச்சனைக்கு சீக்கிரம் முடிவு கட்டுங்கள். அத்துடன் கிளைமேக்ஸ் காட்சிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நெருங்கி விட்டது.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

- Advertisement -

Trending News