வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பெற்ற மகனுக்கு எமனாக நிற்க போகும் விசாலாட்சி.. தர்ஷினியை பகடைகாயாக வைத்து ஆடும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினி பேசிய வீடியோ ஒன்று கோர்ட்டுக்கு ஒரு ஆதாரமாக வந்தது. அதில் என்னை கடத்தி வைத்திருப்பது என்னுடைய அம்மா ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் தான் என்று சொல்லி இருந்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக குணசேகரன் தான் இவர்களை பழி வாங்குவதற்காக ஆட்களை வைத்து மிரட்டி இதை சொல்ல சொல்லி இருப்பார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் கொடுத்த ஐடியா இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது. இதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நான் தப்பித்து போனால் மட்டும்தான் முடியும். அதனால் அதற்கு ஏற்ற ஒரு ஐடியா பண்ணி நான் போய் தர்ஷினியை கண்டுபிடித்து உங்கள் முன்னாடி கூட்டிட்டு வருகிறேன் என்று பிளான் பண்ணி போய்விட்டார்.

இதற்கிடையில் ஜீவானந்தம் சொன்னபடி ஜனனி சிஎம் செல்லுக்கு புகார் அளித்திருக்கிறார். அதன் மூலம் குற்றவை ஐபிஎஸ் அதிகாரி உள்ளே நுழைந்து தர்ஷினியை கண்டுபிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து குணசேகரன் காதுக்கு இந்த விஷயம் போனதும் அவருடைய முகத்தில் ஒரு மரண பீதி தெரிந்தது. உடனே வீட்டை விட்டு எங்கேயோ கிளம்பி போய் விட்டார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

இதற்கிடையில் தம்பிகள் பெயரில் இருக்கும் சொத்து அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார் குணசேகரன். அடுத்தபடியாக தர்ஷினி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து பயத்துடன் புலம்பிக் கொண்டு வருகிறார். மேலும் இன்று வருகிற எபிசோடு படி, குணசேகரன் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறார் என்கின்ற உண்மை அனைத்தும் விசாலாட்சிக்கு தெரிய வருகிறது.

இதனை மறைமுகமாக குணசேகரனிடம் விசாலாட்சி கேட்கிறார். அதற்கு குணசேகரன் உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும் என்று தெனாவட்டாக கேட்கிறார். உடனே ஞானம் பதில் சொல்ல வேண்டும், எங்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்று கூறுகிறார். இப்பொழுதாவது குணசேகரன் பற்றிய உண்மையான முகம் என்னவென்று இவருடைய அம்மாவிற்கு தெரிய வந்துவிட்டது. அத்துடன் பேத்திக்காக பெற்ற மகனுக்கு எமனாக மாறப் போகிறார்.

Also read: டாம் அண்ட் ஜெர்ரியாக இருந்த கதிர், ராஜிக்குள் புகுந்த ரொமான்ஸ்.. கல் மனசாக பரிதவிக்கவிட்ட பாண்டியன்

- Advertisement -

Trending News