குருநாதா இத்தனை நாளா எங்க போனீங்க.. குணசேகரனுக்கு பதிலாக சரவெடியாக வெடிக்க போகும் பட்டாசு நடிகர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாததால் மக்களுக்கு போரடிக்காத வகையில் கொண்டு போக வேண்டும் என்ற நோக்கத்தில் கதிர், ஞானம் மற்றும் விசாலாட்சியை வைத்து நாடகத்தை கரையேற்றி வருகிறார். ஆனால் இதை பார்ப்பவர்களுக்கு, இவங்களையெல்லாம் விட குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை. அவர் வில்லத்தனத்தை காட்டினாலும் பார்த்து ரசிக்கும் படியாக இருந்தது.

ஆனால் தற்போது கதிர், ஞானம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் முகம் சுளிக்கிற மாதிரியும், எரிச்சலாக மன அழுத்தத்தை கொடுக்கிறது என்று சிலர் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்கள். இதற்கிடையில் அவ்வப்போது குணசேகரன் வருகிற மாதிரி காலை மட்டும் காட்டி வருவது, செருப்பை வைத்து குணசேகரனின் உணர்வை கொடுப்பது, போனில் பேசுவது மட்டுமே வைத்து நாடகத்தை கொண்டு வருகிறார்கள்.

Also read: டிஆர்பி-யில் பின்னி பெடலெடுக்கும் டாப் 6 சீரியல்கள்.. குணசேகரனின் பெயரை வைத்து ஆட்டம் காட்டும் எதிர்நீச்சல்

அதற்கு காரணம் அவர் இல்லாதது பலருக்கும் பேர் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அத்துடன் யாரு குணசேகரன் கேரக்டருக்கு வந்தாலும் இவருக்கு ஈடாகாது என்று பலர் சொல்கிறார்கள். அதனால் கொஞ்ச நாள் இதே மாதிரி வைத்து குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து முகத்தை மறக்க வைத்து அதன் பின் புது ஆர்டிஸ்ட் கொண்டு வரலாம் என்று இயக்குனர் முடிவெடுத்து இருக்கிறார்.

இன்னொரு பக்கம் குணசேகரன் இல்லாதது வருத்தமாக இருந்தாலும் அவருடைய கேரக்டருக்கு யார் புதிதாக என்டரி கொடுக்கப் போகிறார் என்று பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கேரக்டருக்கு பட்டாசு பாலு வந்து நடித்தால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also read: வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

பட்டாசு பாலு ஆர்டிஸ்ட் யார் என்றால் ஒரு காலத்தில் இவரை கண்டாலே பயந்து நடுங்குவார்கள் என்று தான் கூற வேண்டும். சில படங்களில் வில்லத்தனமான நடிப்பை காட்டி இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார். அப்படிப்பட்டவர் தான் நடிகர் மற்றும் வில்லன் என பன்முக திறமையை கொண்டு சினிமாவில் வலம் வரும் ஆக்டர் பசுபதி.

கண்டிப்பாக இவர் வந்தால் குணசேகரன் கேரக்டருக்கு ஓரளவுக்கு கச்சிதமாக பொருந்தும். ஆனாலும் இவர் இந்த எபிசோடுக்கு வருவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும். அதுவரை அவர் வருவார் வருவார் என்று சில நாட்களாக சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். இதுல வேற ஜனனி எல்லாத்துக்கும் இனிமேல் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று வழக்கம்போல் வாய்சவடால் விட்டு வருகிறார்.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -