இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

Ethirneechal: மாரிமுத்துவின் இழப்பு ஒரு பக்கம் வருத்தத்தை கொடுத்தாலும் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடை பார்த்த ஆடியன்ஸ் பலரும் இன்று என்ன நடக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அது மட்டுமின்றி புது குணசேகரன் யார் என்ற பட்டிமன்றம் தான் இப்போது சோஷியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் சில ரசிகர்கள் முன்பே சொன்னது போன்று வேல ராமமூர்த்தி தான் வரப்போகிறார் என்று அடித்து சொல்கின்றனர். ஏனென்றால் ஆரம்பத்தில் இவரிடம் தான் சேனல் தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியது.

Also read: இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டும் டாப் 6 சீரியல்கள்.. மற்ற சேனல்களை திணறடிக்கும் எதிர்நீச்சல்

ஆனால் அவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த மாதம் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவர் வாய்தான் அப்படி சொன்னதே ஒழிய கண்ணில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

அதனாலேயே இப்போது புது ஆதி குணசேகரனாக இவர்தான் வரப்போகிறார் என தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் அழகம்பெருமாள் மற்றும் பசுபதி ஆகியோரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

Also read: என் அப்பாவ இப்படி பேச வாய் கூசலை.. நேருக்கு நேர் மோத பயில்வானுக்கு சவால் விட்ட மாரிமுத்துவின் வாரிசு

ஆனால் பசுபதி கல்கி (ப்ராஜெக்ட் கே) உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார். அதனால் அவர் சீரியலுக்கு வர வாய்ப்பே கிடையாது. அதனாலேயே இப்போது பலரின் சாய்சாக இருக்கும் வேலராமமூர்த்தி மாஸாக என்ட்ரி கொடுப்பார் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இப்போது தூக்கிட்டு வாங்க அந்த இளந்தாரிய என ஆர்ப்பரித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் இன்று இரவு ஒட்டுமொத்த யூகங்களுக்கான விடையும் கிடைத்து விடும். அந்த வகையில் 4 மருமகள்களையும் கண்ணசைவில் மிரட்டி பிபி-யை எகிற வைக்க வரும் புது ஆதி குணசேகரன் எந்த அளவுக்கு ஆடியன்ஸ் மனதில் இடம் பிடிப்பார் என்பதை நாம் இனிவரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: மாஸ் என்ட்ரி கொடுக்கும் குணசேகரன்.. அனல் பறக்கும் எதிர்நீச்சல் டிஆர்பி