டிஆர்பி-காக ஜிபி முத்துவை அழவிட்ட விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட தற்போது அசீம், விக்ரமன், கதிரவன், மைனா, சிவின், அமுதவாணன் போன்ற 6 போட்டியாளர்களுடன் இறுதி வாரத்தில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்பதால் இந்தக் கடைசி வாரம் பிக்பாஸ் வீடு மிகவும் பரபரப்பாகவே இருக்கிறது.

அதிலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து விஜய் டிவி தங்களுக்குத் தேவையான புரமோஷன் வேலைகளை எல்லாம் பக்காவாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஜிபி முத்துவையும் பகடைக்காயாக உருட்டி விட்டனர். விஜய் டிவியில் விரைவில் துவங்க இருக்கும் மகாநதி சீரியல் நடிகர் நடிகைகள் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து அந்த சீரியலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Also Read: 97 நாட்களில் ஏடிகே வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

இந்த சீரியலின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. அதேபோன்றுதான் பிக் பாஸ் வீட்டிலும் இதை ஒளிபரப்பு செய்த போது அங்குள்ள போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தது மட்டுமல்லாமல் அதை பார்த்த ஜிபி முத்து கதறி கதறி அழுகிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பலமுறை அழுத ஜிபி முத்து கடைசியில் தன்னுடைய மகனை நினைத்து வீட்டுக்கு சென்று விட்டார்.

இப்போது மறுபடியும் வந்திருக்கும் ஜிபி முத்துவை மகாநதி சீரியல் குடும்பத்தினர் மறுபடியும் செண்டிமெண்டில் கதற விட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் அடுத்ததாக விஜய் டிவியில் துவங்க இருக்கும் மற்றொரு புது சீரியலான ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து அந்த சீரியலின் ப்ரோமோஷன் வேலையையும் பக்கவாக செய்து முடித்தனர்.

Also Read: பிக்பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறும் டம்மி போட்டியாளர்.. யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்

இதுமட்டுமின்றி சமீபத்தில் துவங்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 9 போட்டியாளர்களையும் அழைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியையும் ப்ரொமோட் செய்திருக்கின்றனர். இவர்களுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.

இப்படி இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து விஜய் டிவி தங்களது ப்ரோமோஷன் வேலையையும் சரியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பிக் பாஸ் ரசிகர்களுக்கு யார் டைட்டில் வின்னர் என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி