50 வயதில் ஹனிமூன் சென்ற கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இந்த சூழலில் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என கோபியின் அப்பா ராமமூர்த்தி மும்மரமாக இருக்கிறார்.

காலையில் ஈஸ்வரி காபி கொண்டு வந்து கோபியின் தந்தையிடம் கொடுக்க அவர் காப்பியை கீழே தள்ளி விடுகிறார். இன்னைக்கு உன் பையனுக்கு கல்யாணம் நடக்க போகுது எனக்கு ராமமூர்த்தி சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சியில் உறைகிறார். அதன் பின்பு ராமமூர்த்தி, ஈஸ்வரி, இனியா மூவரும் ஆட்டோவில் செல்கிறார்கள்.

Also Read :பாக்கியாவிற்காக பரபரப்பை கிளப்பும் மகா சங்கமம்.. இனி கோபி,ராதிகா கதி அதோகதிதான்

இங்கு மணமேடையில் கோபி, ராதிகா திருமணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரி வருவதற்கு உள்ளாகவே கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியை கட்டிவிடுகிறார். இது எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மேலும் திருமணம் முடிந்த கையோடு 50 வயதில் கோபி ராதிகாவுடன் ஹனிமூன் செல்ல இருக்கிறார்.

எதிர்பாராத ட்விஸ்டாக அங்கு பாக்யா, எழில், இனியா என கோபியின் மொத்த குடும்பமும் வந்துள்ளது. கோபிக்கு இவர்கள் மட்டும் பத்தாது என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் கோபி ஹனிமூன் சென்ற இடத்திற்கு வருகிறார்கள்.

Also Read :விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

இவ்வாறு எட்டிலிருந்து ஒன்பது மணி வரை ஒரு மணி நேர மகா சங்கமமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே கோபிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்றால் சுத்தமாக பிடிக்காது.

போதாக்குறைக்கு கோபி புது மனைவியுடன் ஹனிமூன் வந்துள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இவரை வச்சு செய்ய உள்ளது. இதனால் ராதிகா முன் கோபி மாட்டிக்கொண்டு முழுக்க உள்ளார். இவ்வாறு பல சுவாரசியமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் வரை இருக்கிறது.

Also Read :டிஆர்பிக்காக ராஜ்கிரண் வைத்தெரிச்சலை கொட்டிய பிரபல சேனல்.. விஜய் டிவியை மிஞ்சுடுவாங்க போலயே

Advertisement Amazon Prime Banner