சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கோபியையும் மாமியையும் புலம்ப விடும் பாக்யா.. மறு திருமணத்திற்கு சப்போர்ட் செய்யும் சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது பிள்ளைகள் மட்டும் தான் ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறது. மற்றபடி பெண்களின் கல்யாண வாழ்க்கை சோகத்திலும், நிம்மதியும் இல்லாமல் தவித்து வாழும் ஒரு சிறை தண்டனை என்பதற்கேற்ப இருக்கிறது என்று பாக்யா நினைக்கிறார்.

அதாவது பழனிச்சாமி மற்றும் பாக்கியா பேசிக் கொண்டதை தவறாக குடும்பத்தின் முன் சித்தரித்துக் காட்டினார் கோபி. ஆனால் அம்மாவை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று பிள்ளைகள் அனைவரும் பாக்யாவிற்கு துணையாக இருந்தார்கள். அத்துடன் ராதிகாவும் பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக பேசி கோபி மற்றும் மாமியாரின் வாயை அடைத்து விட்டார்.

அடுத்ததாக கோபி, ராதிகாவிடம் நீ ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் பாக்யாவிற்கு சப்போர்ட் செய்தாய் என்று கேட்கிறார். அதற்கு ராதிகா, பாக்கியவிடம் நான் ஏதும் கேள்வி கேட்க முடியாது. அது எனக்கு தான் பெரிய அவமானமாக இருக்கும். முதலில் அவங்க யார் கூட பேசினா உங்களுக்கு என்ன. நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் பாக்கியாவையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க என்று ராதிகா கேட்கிறார்.

Also read: கதையே இல்லாமல் உருட்டும் எதிர்நீச்சல் சீரியல்.. ஹனிமூன் மாதிரி ஜெயிலுக்கு போகும் குணசேகரன்

இந்த நேரத்தில் கோபின் அம்மா உள்ளே நுழைந்து வழக்கம் போல் ராதிகாவை குறை சொல்கிறார். அதற்கு ராதிகா ஸ்டைலில் கோபி அம்மாவிற்கு பதிலடி கொடுக்கிறார். அடுத்தபடியாக ராதிகா, பாக்கியாவிடம் சென்று நான் இந்த மாதிரி சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க. நான் எந்த தப்பான அர்த்தத்திலும் சொல்லவில்லை என்று சொல்லி உங்களுக்கு ஒரு துணை தேவை.

அதனால் நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருந்து கொள்ளலாம். அதுவே உங்களை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிற பழனிச்சாமியை நீங்க கல்யாணம் பண்ணால் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு பாக்யா கல்யாணம் பண்ணினவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கிறார்களா என்று கேட்கிறார்.

ஏன் நீங்கள் கூட சொல்லுங்க சந்தோஷமாக இருக்கீங்களா என்று கேட்டதும் ராதிகாவால் ஏதும் சொல்ல முடியாமல் மன்னிப்பு கேட்டுவிட்டு போய்விட்டார். கடைசியில் கல்யாணம் என்பது குழந்தைகளை பெற்றெடுத்து அவர்கள் நம்முடன் இருக்கும் ஒரு சந்தோஷம் மட்டும்தான். மற்றபடி பெண்களுக்கு அது தேவையில்லாத ஒரு விஷயம் என்கிற மாதிரி பாக்கியா மற்றும் செல்வி அக்காவும் பேசிக்கொள்கிறார்கள்.

Also read: பித்து பிடித்த மாதிரி நடந்து கொண்ட கோபி அங்கிள்.. பாக்யாவை விட்டுக் கொடுக்காமல் பேசிய சக்காளத்தி

- Advertisement -

Trending News