புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பித்து பிடித்த மாதிரி நடந்து கொண்ட கோபி அங்கிள்.. பாக்யாவை விட்டுக் கொடுக்காமல் பேசிய சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் வர வர கோபியின் நடிப்பு, பேச்சு அனைத்தும் பார்ப்பதற்கு எரிச்சல் படுத்தும் விதமாக இருக்கிறது. அதாவது கோபி செஞ்ச தப்பு எதுவும் பெரிசாக இவருக்கு தெரியவில்லை. இதுல தப்பே செய்யாத பாக்யாவை தினந்தோறும் மட்டமாக பேசுவதும், அவரை வேவு பார்ப்பது என சைக்கோ மாதிரி நடந்து கொள்கிறார்.

இவருக்கு துணையாக இவருடைய அம்மாவும் சப்போர்ட் செய்கிறார். பல இக்கட்டான சூழ்நிலையில் கோபி குடும்பத்தை விட்டு போனபோது அதை தாங்கி பிடித்து பக்கபலமாக இருந்தது பாக்கியா. ஆனால் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் கண்மூடித்தனமாக பையன் சொல்வதை நம்பி பாக்கியாவை கண்டிப்பது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது.

அத்துடன் பழனிச்சாமி இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது. அவரை அடிக்கடி பார்த்து பேசுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாக்கியவிடம் மாமியார் சொல்லி விடுகிறார். இதற்கிடையில் வீட்டிற்கு வந்த ராதிகாவிடம் பஞ்சாயத்துக்கு நியாயம் கேட்கிறார் கோபி. பழனிச்சாமி வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

Also read: குணசேகரனை தோலுரிக்க போகும் ஈஸ்வரி.. தனக்குத்தானே ஆப்பு வைத்த கொம்பேறி மூக்கன்

இதை பார்த்த நான் இதெல்லாம் தப்பு என்று சொன்னதற்கு என்னை வீட்டை விட்டு போக சொல்கிறார். இது நியாயமா எனக்கு சப்போர்ட்டாக நீ வந்து கேளு என்று ராதிகாவை சின்ன பிள்ளைத்தனமாக கோபி கூட்டிட்டு வருகிறார். ஆனால் ராதிகா வந்ததும் பாக்கியா யாரிடம் பேசினால் உங்களுக்கு என்ன. அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கோபியை கேள்வி கேட்கிறார்.

இதை எதிர்பார்க்காத கோபி எதுவும் சொல்ல முடியாமல் வாய் அடைத்து போய் இருக்கிறார். அத்துடன் மகன்களும், இனியா மற்றும் மருமகள் அனைவரும் பாக்யாவிற்கு தான் சப்போர்ட் செய்கிறார்கள். இதனால் குடும்பத்தில் அனைவருக்கும் முன்னாடியும் கோபி ஒரு பித்து பிடித்தது போல் நடந்து கொள்கிறார். ஆனால் கடைசிவரை பாக்கியவை எதற்காகவும் விட்டுக் கொடுத்து பேசாமல் சப்போர்ட்டாக ராதிகா பேசிவிட்டு கோபியை அதட்டி விடுகிறார்.

இதனை தொடர்ந்து ராதிகா இனிமேல் பாக்யா வீட்டில் தான் இருக்கப் போகிறார். அத்துடன் பாக்யாவின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக கை கொடுத்து நம்பிக்கையுடன் பேசி தூக்கி விடப் போவதும் ராதிகா தான். ஆக மொத்தத்தில் இனி கோபி அந்த வீட்டில் ஒரு செல்லா காசாக தான் எதற்கும் பயன்படாமல் சும்மா வாய்சடால் மட்டும் விட்டுக் கொண்டு அலையப் போகிறார்.

Also read: பாக்கியாவின் கேரக்டரை கொச்சைப்படுத்தி பேசிய முன்னாள் கணவர்.. அப்படியே மண்ணு மாதிரி நிற்கும் மங்குனி

- Advertisement -

Trending News