ஆக்ரோஷமாக மாமியாரின் கழுத்தை நெறித்த கோபி.. ராதிகாவுக்கு சொன்ன குட்பாய், கதறி அழும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா அம்மா கொடுத்த கம்ப்ளைன்ட் படி ஈஸ்வரி ஜெயிலில் இருக்கிறார். ஜாமினில் எடுக்க முடியாத சூழ்நிலையில் பாக்கியா குடும்பம் ஒட்டுமொத்தமாக நிலை குலைந்து போய் வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். ஒரு பக்கம் தாத்தா பேரன் என்று ஈஸ்வரிக்காக புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் அத்தைக்கு இந்த நிலைமையாய் என்று பாக்கியா நொறுங்கிப் போய்விட்டார்.

இதையெல்லாம் தாண்டி கோபி, ராதிகா வீட்டிற்கு கோபத்துடன் வருகிறார். கதவு பூட்டி இருப்பதால் கதவை காலால் மிதித்து ராதிகா ராதிகா என்று கத்தி கூச்சலிடுகிறார். பிறகு ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்த கோபி, ராதிகா அம்மாவின் கழுத்தை நெரித்து பிரச்சினை பண்ணுகிறார். இதை தடுத்த ராதிகாவிடம் சண்டை போட்டு வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைக்கிறார்.

அம்மா பேச்சைக் கேட்டு கோபியை இழக்கும் ராதிகா

இப்பொழுதுதான் கோபி மனதார உண்மையை பேசுகிறார் என்று சொல்வதற்கு ஏற்ப ராதிகாவிடம் எப்பொழுது உன்னை பார்த்தேனோ அப்பொழுது எனக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது. கஷ்டப்பட்டு கொண்டு இருந்த உனக்கு நான் வாழ்க்கை கொடுக்க நினைத்தது தப்பு தான் என்று கோபி சொல்கிறார். இதை கேட்டதும் ராதிகா நீங்க தான் வெட்கமே இல்லாமல் நீதான் எனக்கு வேண்டும் என்று என் பின்னாடி அலைந்ததை சொல்கிறார்.

அதற்கு கோபி இதுதான் நான் பண்ணின பெரிய தப்பு என்று சொல்லி, நீ கடனில் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தாய். அப்பொழுது உனக்கு ஆறுதலாக உனக்கு வாழ்க்கை கொடுக்க நினைத்தது நான் செய்த முட்டாள்தனம் என்று சொல்லி ராதிகாவையும் அவருடைய அம்மாவையும் திட்டிவிட்டு என் அம்மாக்கு மட்டும் ஏதாவது ஆகிவிட்டது என்றால் உங்களை நான் சும்மா விட மாட்டேன். இனி உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லி குட்பாய் என கோபி வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டார்.

பிறகு வெளியே போன கோபி, நண்பரிடம் அம்மாவை நினைத்து புலம்புகிறார். என்னுடைய அம்மா எந்த கஷ்டத்திலும் என்னை கைவிடாமல் எனக்காக சப்போர்ட் பண்ணார்கள். அவர்களை இந்த கெதிக்கு நான் ஆளாகி விட்டேன் என்று நினைக்கும் போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. இதால அவங்க உடம்புக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் இருக்கிறது. மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிடாமல் இருக்க முடியாது என்ன பண்ணுவாங்கன்னு தெரியலை என்று நண்பரிடம் சொல்லி புலம்புகிறார்.

இதற்கிடையில் ஜெயிலில் இருக்கும் ஈஸ்வரி, ராதிகாவின் அம்மா பேசியது நினைத்து அழுது கொண்டிருக்கிறார். ஒரு கொலைகாரி குழந்தை கொன்னுட்டியே என்று சொல்லிய வார்த்தைகள் காதில் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஈஸ்வரி மொத்தமாக நொடிந்து போய்விட்டார். போதாதருக்கு போலீஸ், ஈஸ்வரியை கூப்பிட்டு விசாரணை என்கிற பெயரில் மறுபடியும் நோகடிக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் ஈஸ்வரிக்கு எதிராக ராதிகா மற்றும் கோபி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஈஸ்வரிக்கு தண்டனை கிடைக்கும் விதமாக விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். இதை கேட்டதும் ஈஸ்வரி, பாக்கியாவிடம் இனி நான் ஜெயலில் தான் இருக்கணுமா என்று மன வேதனையில் கேட்கிறார். இதற்கெல்லாம் முடிவாக ஈஸ்வரி எந்த வித தவறும் பண்ணவில்லை என்று ஆதாரத்தை பாக்கியா ரெடி பண்ணினால் மட்டும்தான் ஈஸ்வரிக்கு இந்த கேஸ்ல இருந்து விடுதலை கிடைக்கும்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -