பாண்டியனிடம் சிக்கிய கதிர், ரிஸ்க் எடுக்கும் ராஜி.. மருமகள் புத்தி தெரியாமல் மொத்தத்தையும் சொதப்பிய கோமதி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம் டியூஷன் எடுப்பதற்காக மீனாவிற்கு தெரிந்த நபரை போய் சந்தித்து பேசுவதற்காக ராஜியை கூட்டிட்டு கிளம்புகிறார். இதை கோமதியிடம் சொல்லிட்டு போகலாம் என்று நினைக்கும் பொழுது பக்கத்தில் தங்கமயில் இருந்ததால் மீனா ராஜி கோவிலுக்கு போயிட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள.

உடனே கோமதி, தங்கமயிலையும் கூட்டிட்டு போங்கள் என்று சொல்கிறார். ஆனால் தங்கமயில் வந்தால் காரியம் கெட்டுவிடும் என்பதால் ராஜி மீனா அவர்களிடம் ஏதோ சொல்லி சமாளித்து வெளியே கிளம்பி விடுகிறார்கள். இதை பார்த்த தங்கமயில், நான் இந்த வீட்டுக்கு வேண்டாத மருமகளாகத்தான் இருக்கிறேன். அவர்கள் இருவரும் என்னை ஒதுக்குகிறார்கள் என்ற புலம்புகிறார்.

மருமகளிடம் உண்மையை உளறிய கோமதி

இதைக் கேட்ட கோமதி, தங்கமயிலை ஆறுதல் படுத்தும் விதமாக அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. நீ தேவையில்லாமல் ஏதாவது யோசித்து குழம்பாதே என்று சொல்கிறார். பிறகு ராஜி மீனா போன விஷயம் நல்லபடியாக முடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி கோமதி அத்தை இடம் சொல்லி எப்படியாவது பாண்டியன் மாமாவிடம் பேசி சம்மதத்தை வாங்க சொல்லலாம் என்று முடிவு பண்ணி வீட்டிற்குள் நுழைகிறார்கள்.

அதன்படி கோமதி கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது ராஜி வீட்டில் போய் டியூஷன் எடுப்பதை சொல்கிறார். ஆனால் இதை நீங்கள் தான் எப்படியாவது மாமாவிடம் பேசி சம்மதம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று மீனா சொல்கிறார். அந்த நேரத்தில் தங்கமயில் நுழைந்ததும் இவர்கள் பேசுவதை நிறுத்தி விடுகிறார்கள். உடனே தங்கமயில் நான் வந்ததும் ஏதோ பேச்சை நிப்பாட்டி வேற விதமாக பேசுகிறீர்கள் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு மீனாவும் ராஜியும் ஒன்னும் இல்லை என்ற சமாளிக்கும் பொழுது கோமதி, தங்கமயில் இடம் அனைத்தையும் உளறி விட்டு சொதப்புகிறார். ஏற்கனவே தங்கமயில் கேரக்டர் எப்படி என்று தெரிந்த கோமதி ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பது மீனா ராஜிக்கு குழப்பமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து மாடியில் கதிர் மற்றும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் அதை கேட்டுக்கொள்கிறார்.

உடனே பாண்டியன் வழக்கம்போல் கதிரை மட்டம் தட்டி கோபமாக பேசுகிறார். பாண்டியன் கதிரை திட்டும் பொழுது ராஜிக்கு எரிச்சல் ஆகிறது. ஆனாலும் எதையும் வெளிகாட்டாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். ராஜியை பொறுத்தவரை எப்படியாவது நம்மளால் முடிந்தவரை கதிருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக பாண்டியன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று அதிகமான ரிஸ்கை எடுத்து புருஷனுக்கு உதவியாக இருக்கப் போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -