சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சின்ன பிள்ளைத்தனமாக விளையாடும் கோபி, அசிங்கப்படுவதே வேலையா போச்சு.. கெத்து காட்டும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றால் சீப்பை ஒழித்து வைத்தால் நின்னு விடும் என்ற காமெடிக்கு ஏற்ப கோபியின் செயல்கள் இருக்கிறது. கோபி பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை இழுத்து மூடிவிட்டார். இந்த விஷயம் ராதிகா மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது.

அடுத்து பாக்கியா, எதார்த்தமாக கோபி இடம் என்னுடைய பிசினஸில் வந்து வேலை பார்க்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். இதை அவமானமாக நினைத்து நீ எப்படி என்னை உன் வேலைக்கு கூப்பிடுவாய் என்று பிரச்சனை பண்ணினார். அது மட்டுமில்லாமல் ராதிகா, அவருக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடன் வந்து வேலை பார்க்க வேண்டிய அவசியம் கோபிக்கு இல்லை என்று திட்டிவிட்டார்.

இந்த சூழ்நிலையில் பாக்கியா அவருடைய ரெஸ்டாரண்டை ஓபன் பண்ணி அடுத்த லெவலுக்கு வெற்றி பெற முயற்சி எடுக்கிறார். அதற்காக பத்திரிக்கை எல்லாம் அடித்து தெரிந்தவர்களை வர வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்குவதற்காக கலெக்டரை கூப்பிட்டு இருக்கிறார்.

Also read:தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

இதனை தொடர்ந்து அனைவரும் கலெக்டருடைய வருகைக்காக ஓபனிங் ஃபங்ஷனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இதை பார்த்து சந்தோஷப்படும் விதமாக ஜெனியும் இந்த பங்க்ஷன்க்கு வந்திருக்கிறார். அடுத்து கோபியும் வருகிறார். ஆனால் இதற்கு இடையில் சின்ன பிள்ளைத்தனமாக ஒரு விளையாட்டை பண்ணியிருக்கிறார்.

அதாவது கலெக்டர் வரவில்லை என்றால் இந்த பங்க்ஷன் நின்னுவிடும் என்று லாஜிக்கே இல்லாமல் யோசித்து கலெக்டரை வரவிடாமல் தடுப்பதற்கு கோபி ஏற்பாடு பண்ணி இருக்கிறார். கலெக்டர் வரவில்லை என்றாலும் பங்க்ஷன் நல்லபடியாக முடிந்துவிடும். இருந்தாலும் கலெக்டர் சொன்னபடி இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு பாக்கியா மற்றும் அவருடைய குடும்பத்துக்கு வாழ்த்துக்களை சொல்ல வருவார்.

வழக்கம் போல் கோபி அனைவரது முன்னிலையிலும் அசிங்கப்பட்டு கொண்டே வருகிறார். அத்துடன் பாக்கியா நினைத்தபடி சொந்த கல்லில் நின்னு கெத்து காட்டுகிறார். தற்போது இந்த கதையை வைத்து கூடிய விரைவில் இந்த நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் இனிதாக இருக்கும். அதை விட்டுவிட்டு கோபியை வைத்து இன்னும் காமெடி பண்ணால் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Also read: ஓசிலையே கோடீஸ்வரி ஆகலாம்னு கனவு காணும் விஜயா.. கழுவுற தண்ணீல நழுவுற மீனாக எஸ்கேப் ஆகும் ரோகினி

- Advertisement -

Trending News