புதன்கிழமை, நவம்பர் 13, 2024

குணசேகரனை தோலுரிக்க போகும் ஈஸ்வரி.. தனக்குத்தானே ஆப்பு வைத்த கொம்பேறி மூக்கன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் செஞ்ச ஒரு உருப்படியான விஷயமே ஈஸ்வரியை எலெக்ஷனில் நிற்க வைத்தது. அதற்குக் காரணம் எஸ்கேஆர் குடும்பத்தை தோற்கடித்து சாரு பாலாவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். எது எப்படியோ கடைசியில் இந்த ஒரு விஷயத்தினால் ஈஸ்வரி அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடையப் போகிறார்.

அதாவது எப்படியும் எலக்ஷனில் ஈஸ்வரி ஜெயித்து விடுவார். அதன் மூலம் கையில் ஒரு பதவி வந்துவிடும். பதவி வந்துட்டாலே தன்னம்பிக்கையும் துணிச்சலும் ரொம்பவே அதிகமாகிவிடும். அதன் பின் குணசேகரன் என்ன சொன்னாலும் பெருசாக எடுபடாமல் போய்விடும். ஆனால் குணசேகரன் பழைய மாதிரி டம்மியாகத்தான் ஈஸ்வரியை பயன்படுத்த வேண்டும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.

இதில் ஈஸ்வரியோ கிடைச்ச இந்த சான்சை பயன்படுத்தி குணசேகரனின் முகமூடியை தோலுரித்துக் காட்டுவார். அடுத்தபடியாக குணசேகரனை விட பல மடங்கு கொடூரமாக கதிர் அனைவரையும் பேசுவதும், அராஜகமாக நடந்து கொள்வதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. அதாவது ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணம் கதிர் மற்றும் குணசேகரன்.

Also read: பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்

ஆனால் இந்த உண்மை பலருக்கும் தெரிந்தும் கதிர் தப்பித்தது நியாயமே இல்லை. அதனால் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் விதமாக கதிர் செஞ்ச தப்புக்கு தக்க தண்டனை கிடைத்தால் இந்த நாடகத்திற்கு இன்னும் விறுவிறுப்பு அதிகரிக்க கூடும். அதை விட்டுவிட்டு அவர் செஞ்ச தவற அப்படியே பூசி மழுப்பி கொண்டு போனால் சுவாரசியமே இல்லாத அளவிற்கு புஸ்ஸுன்னு இருக்கிறது.

அதனால் கூடிய விரைவில் கதிருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதன் பின் வாய் சவடால் மட்டுமே விட்டுக் கொண்டு மற்ற மருமகள்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஜனனிக்கு ஒரு வெற்றிப் பாதை அமைந்திருந்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் எப்போதுமே ஒருவர் ஜெயித்த பின்பு சொல்வது மற்றவர்களுக்கு ரொம்பவே ஊக்கப்படுத்துவதாக இருக்கும்.

அந்த வகையில் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகாவுக்கு வெறும் அட்வைஸ் மட்டுமே கொடுத்துட்டு வரும் ஜனனி ஒரு படி முன்னேறி காட்டினால் நன்றாக இருக்கும். இவரைப் பார்த்து மற்றவர்களும் ஜெயிப்பதற்கு ஒரு படி கட்டாக இருக்கும். அதை விட்டுவிட்டு வாய்சவடால் மட்டும் விட்டு வீர வசனம் பேசுவது ஜனனியை பார்ப்பதற்கு எரிச்சலை உண்டாக்கிறது. இப்படி இந்த நாடகம் பல விஷயங்களில் சொதப்பிக்கொண்டு வருகிறது. இதை சரி செய்யும் விதமாக அடுத்தடுத்த விஷயங்கள் மக்கள் எதிர்பார்த்தபடி கொண்டு போனால் நன்றாக இருக்கும்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி

- Advertisement -spot_img

Trending News