செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

அதர்வாவிற்கு  சமீபத்தில் எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படம் பட்டத்து யானை அதுவும் அவருக்கு கைகொடுக்காத நிலையில் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் கமிட்டான படம் கூட அவர் கைநழுவி போனது. சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற ஒரு படத்தை அதர்வாவை வைத்து எடுப்பதாக இருந்தார். ஆனால் அது இப்பொழுது அதர்வாவிடம் இருந்து விஷ்ணு விஷால் இடம் சென்றுவிட்டது.

Also Read : சூப்பர் ஸ்டாரை காரணம் காட்டி ஐஸ்வர்யா கொடுக்கும் பிரஷர்.. கட் அண்ட் ரைட்டாக பேசும் லைக்கா

ஐஸ்வர்யாவிடம் அதர்வா வேண்டாம் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான் கூறியதாக தெரிகிறது. இந்த தம்பி படம் சமீபத்தில் ஓடுவதில்லை, அதனால் வேறு ஒரு ஹீரோவைப் போட்டு இந்த படத்தை எடுக்கலாம் என்று அறிவுரை கூறியதே லைகா நிறுவனம்தானாம்.

இது ஒருபுறமிருக்க பாலா, சூர்யாவை வைத்து எடுத்துக்கொண்டிருந்த வணங்கான் படமும் டிராப் ஆனது. சூர்யா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டேன் என்று சூரியாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டார்.

Also Read : எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலா தன் தரப்பில் இந்தப்படத்தை அதர்வாவை வைத்து எடுக்கப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இப்பொழுது தான் பிரச்சனையே, ஏற்கனவே தயாரிப்பாளர்கள் எல்லாம் அதர்வாவை வேண்டாம் என்று கூறிக் கொண்டு இருக்கையில் பாலா இப்படி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

ஏற்கனவே சூர்யா தான் வணங்கான் படத்தை தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்க விழுந்தது. இப்பொழுது அதர்வா படத்திற்கு எந்த தயாரிப்பாளர்கள் வருவார்கள் என்பதுதான் கேள்விக்குறி. கசாப்புக் கடையில் சிக்கிக்கொண்ட ஆடு போல் மாட்டிக் கொண்டார் அதர்வா. இப்பொழுது பாலா தயாரிப்பாளரை வேறு தேடி அலையனும்.

Also Read : தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அதர்வா பட இயக்குனர்.. இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா!

- Advertisement -

Trending News