1528 முதல் 2024 வரை.. அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை.!

The path of the Ayodhya Ram temple: உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாலராமர் கோயிலின் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பிரபலங்கள் 8000 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கோயில் அவ்வளவு சாதாரணமாக எழும்பவில்லை, இதற்கு பின்னால் என்னென்ன நடந்திருக்கிறது , 500 ஆண்டுகளின் போராட்டம். இதனால் பல பேருடைய உயிரும் போயிருக்கிறது.

1528 ஆம் ஆண்டு அயோத்தியை ஆட்சி செய்த முகலாய மன்னர் பாபரின் ஆட்சிக்காலத்தில் அவரது தளபதி மீர் பாகி என்பவர் பாபர் மசூதியை கட்டினார். அன்று முதல் அந்த மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தது. அதன் பின் 1949 ஆம் ஆண்டு முகலாயர் மன்னர் கட்டிய பாபர் மசூதிக்குள் மர்மமான முறையில் ராமர், சீதையின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த ஒரு விஷயம் பத்தாதா! மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, இதை வைத்தே பிரளயத்தையே கிளப்பி விட்டனர். அதன்பின் 1959 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் வழிபாடு நடத்த உரிமை கோரி இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த சமயத்தில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில் பல பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடத்தில் ஹிந்துக்கள் வழிபட அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதி வழங்கினார். அந்த சமயத்தில் 1985- 86 வரையிலான காலகட்டத்தில் அயோத்தி ராமன் கோயிலுக்காக புதிய இயக்கத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) தொடங்கியது. பின்பு 1990 ஆம் ஆண்டில் ராமர் கோயிலுக்காக ரத யாத்திரையை அத்வானி மேற்கொண்டதற்காக பீஹாரில் கைது செய்யப்பட்டார்.

Also Read: மசூதிக்கு கீழ் புதைந்திருந்த ராமர் கோவில்.. கண்டுபிடித்த முஸ்லீம்

அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை

அப்போது இந்த பிரச்சனை தலை விரித்து ஆடியது. ஒரு கட்டத்தில் கர சேவகர்களால் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1999இல் மசூதியின் கீழ் பகுதியில் கோயில் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டு, இந்த பிரச்சினையை மேலும் பரபரப்பாக்கினார்கள். அதைத்தொடர்ந்து 2019 தொல்லியல் துறை கொடுத்த அறிக்கையின் படி மசூதி இடிக்கப்பட்ட இடத்தை சன்னிவக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம்லல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாத இந்து அமைப்பினர் 2011 முதல் 2019 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தனர். பின் 2019ல் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அதன் பின் அடுத்த வருடமே 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டு 2024 ஆம் ஆண்டு நேற்று அயோத்தி ராமன் கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

என்னதான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டாலும், அது பாபர் மசூதியை இடித்து அதன் மேல் கட்டப்பட்ட கோயிலாக ஒரு தரப்பினர் பார்க்கின்றனர். மதச்சார்பற்ற இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் சிலர் கொந்தளிக்கின்றனர். மேலும் அப்பாவி இந்து மக்களை ஏற்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழாவாகவும் இதைப் பார்க்கின்றனர். ஆனால் மோடியை பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோயிலை கட்டியதற்காக மக்கள் என்னை நினைவு கூறுவார்கள் என்று பெருமை கொள்கிறார். அதே சமயம் 500 ஆண்டுகால பிரச்சனைக்கு பிரதமர் மோடி தீர்வு கண்டுள்ளார் என்றும் சிலர் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Also Read: அயோத்தி பக்கம் அத்தனை கோடிகளை வளைத்த அமிதாப்.. ரஜினி முதல் இப்பவே வளைக்கப்படும் விஐபிகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்