கோமா ஸ்டேஜ் போன கதையை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. ஜெயம் ரவியை கோமாளியாக மாற்றிய பிரதீப்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சில படங்களில் நடிகை, நடிகர்களுக்கு விபத்து ஏற்பட்டு அதற்குப் பின்னர் வரும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதாக சில படங்கள் அமைந்திருக்கும். அப்படி அமைந்த படங்களில் வெற்றி படங்களான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ராஜா ராணி: அட்லீ இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ராஜா ராணி. இந்தப் படம் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்தனர். இதில் ஆர்யாவும் நஸ்ரியாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன்பிறகு நஸ்ரியா சாலையைக் கடக்கும் போது ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகிறது. இதனால் இவர் இறந்து விடுகிறார். மேலும் ஆர்யா இதை மறந்து நயன்தாராவுடன் வாழ்க்கை ஆரம்பிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும்.

Also read: அட்லீயை பல கோடி கொடுத்து தூக்க ரெடியான 3 தயாரிப்பாளர்கள்.. இவர அடிச்சா அவர் தானா வருவாரு என்ற நம்பிக்கையாம்

எங்கேயும் எப்போதும்: எம்.சரவணன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படம் சாலை போக்குவரத்து அடிப்படையாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி மற்றும் அனன்யா ஆகியோர் நடித்தனர். இந்த படம் ஆரம்பிக்கும் பொழுதே ஒரு விபத்தில் தொடங்குகிறது. இதில் இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு விடுகிறது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அங்காடி தெரு: வசந்தபாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு காதல் திரைப்படமாக அமைந்தது அங்காடித்தெரு. இதில் அறிமுகமான மகேஷ் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்தனர். இப்படம் முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் ரங்கநாதன் தெருவில் நடக்கும் விஷயங்களை சுட்டிக்காட்டி இருப்பார். இதில் அஞ்சலிக்கும், மகேஷ்க்கும் தங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு கட்டத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தெருவில் தங்குகிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு லாரி ஏறி விபத்துக்குள்ள ஆகிறது. பின்பு அதற்கு சிகிச்சை எடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள்.

Also read:  அங்காடித் தெருவில் அஞ்சலி முதல் சாய்ஸ் இல்லை.. வசந்தபாலன் கூறிய சீக்ரெட்!

நீ வருவாய் என: ராஜகுமாரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் நீ வருவாய் என. இப்படத்தில் பார்த்திபன், அஜித் குமார், தேவயானி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் பார்த்திபன் வங்கி மேலாளராக பணிபுரிவதற்கு பேருந்தில் சென்ற போது விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தினால் அவருடைய கண்களை இழக்கிறார். மறுபக்கம் அஜித் போகும் கார் விபத்துக்குள்ளாகிறது. இதனால் அஜித் இறந்து விடுகிறார். பின்னர் அஜித் கண்களை எடுத்து பார்த்திபனுக்கு வைக்கப்படுகிறது.

கோமாளி: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கோமாளி திரைப்படம் நகைச்சுவையாக வெளிவந்தது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக பிரதீப் அறிமுகமானார். இதில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் ஜெயம் ரவி டிராக்டரில் மோதி மயக்கம் அடைந்து விடுகிறார். இதனால் இவரது சுயநினைவை மறந்து 16 வருடங்களாக கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறார்.
மேலும் இத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: மீண்டும் பிரதீப்பை லாக் செய்த பிரபல நிறுவனம், ஹீரோ யார் தெரியுமா ? 100 கோடி வசூல் பார்த்த கை சும்மா இருக்குமா!

- Advertisement -spot_img

Trending News